மனைவியுடன் சண்டை. இடுப்பில் மறைச்சு வச்ச கத்தி.. எடுத்தபோது படாத இடத்தை தாக்கியதில் கணவன் சாவு
Recommended Video
சென்னை: மனைவியுடன் சண்டை போட்ட மனோகரனை பக்கத்து வீட்டுக்காரர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது நடந்த தகராறில் இடுப்பில் மறைத்து வைத்த கத்தியை எடுக்க மனோகரன் முற்பட்ட போது எதிர்பாராத விதமாக கத்தி அவரது வயிறு மற்றும் பிறப்புறுப்பை கிழித்தது. இதில் அவர் பரிதாபமாக இறந்து போனார்.
சென்னை, வில்லிவாக்கத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் மனோகரன் (28). இவர் சரிதா (24) என்பவரை ஒரு வருசத்துக்கு முன்பு கல்யாணம் செய்திருக்கிறார்.
இந்த தம்பதிக்கு கல்யாண வாழ்க்கை ஆரம்பத்திலேயே மோதலில் ஆரம்பிச்சுருக்கு. எல்லாம் இந்த பாழாய் போன குடிப்பழக்கம் தான் காரணம். இவருக்கும் இடையே கல்யாணம் ஆன சில நாளிலேயே கருத்து வேறுபாடு அதிகரித்துவிட்டது.

சித்ரவதை
அடிக்கடி மனோகர் குடித்துவிட்டு சரிதாவை அடிப்பதையும், துன்புறுத்துவதையும் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். இதனால் வெறுத்துப்போன சரிதா அயனாவரத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவிடுவாராம். பின்னர் சமாதனம் ஆகி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

குடிபோதையில் சண்டை
அப்படித்தான் அண்மையில் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சரிதா சென்றிருள்ளார். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு குடிபோதையில் அங்கு மனோகர் வந்திருக்கிறார்.
அங்கு அவர் மதுபோதையில் கண்டபடி பேசி தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்.

பக்கத்து வீட்டுக்காரர்
அப்போது சத்தம் கேட்டு சரிதாவின் தாய் வீட்டின் அருகே வசித்து வந்த ராகவேந்திரன் (65) வந்து ஏன் இப்படி சத்தம் போடுகிறாய் என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து கைகலப்பாகி உள்ளது.

ராகவேந்தர் படுகாயம்
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக ரத்தம் வெளியேறிய காரணத்தால் மனோகரன் உயிரிழந்தார். படுகாயமடைந்த ராகவேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications