'காஞ்சனா-3' பட ரஷ்ய நடிகைக்கு பாலியல் தொல்லை.. இச்சைக்கு இணங்குமாறு மிரட்டிய நடிகர் கைது
Recommended Video
சென்னை: காஞ்சனா- 3 படத்தில் நடித்த ரஷ்ய நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விளம்பர பட நடிகரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் ரஷ்யாவைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா- 3 படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் அளித்தார்.

வாட்ஸ் அப்பில் படம்
அந்த புகார் மனுவில், பல விளம்பரங்களில் நடித்துள்ள ரூபேஷ்குமார்(26) என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் என்னை விளம்பர படங்களில் நடிக்க வைப்பதாக கூறி என்னை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார்.

மிரட்டினார்
அதை வைத்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அவருடைய இச்சைக்கு இணங்காவிட்டால் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி வருகிறார். எனவே ரூபேஷ்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

வழக்கு பதிந்த போலீஸ்
இந்த புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதன்படி மத்திய சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

நடிகர் கைது
அதன் பின்னர் புகாருக்கு உள்ளான விளம்பர பட நடிகர் ரூபேஷ் குமார் நேற்று முன்தினம் இரவு கைது செய்ப்பட்டார். விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து விளம்பர பட நடிகர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications