சென்னை ஏர் ஷோ.. 13 லட்சம் பேர் பங்கேற்பு.. லிம்கா சாதனையில் இடம்பிடிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மிக சிறப்பாக இன்று விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சி, புதிய சாதனை படைத்து உள்ளது. விமான கண்காட்சிக்காக அதிக அளவில் கூட்டத்தை ஈர்த்ததற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.

இந்திய விமானப் படை 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

chennai air show 2024 iaf airshow 2024 indian air force 2024

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்.. இன்று நடந்த நிகழ்வில் 12-15 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இன்று காலை 11 மணிக்கு இந்த விமான சாகச நிகழ்ச்சிகள் தொடங்கியது. இந்த நிலையில், மதியம் 1 மணி வரை இது நடந்தது. சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் விழாவை காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ரஃபேல், இலகுரக போர் விமானம் தேஜாஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த், பாரம்பரிய விமானம் டகோட்டா என 72 விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

பல லட்சம் பேர் வருகை: நிகழ்ச்சியைக் காண ரயில், மெட்ரோ, கார்கள், பேருந்துகள் என 13 லட்சத்துக்கும் அதிகமானோர் அரங்கிற்கு குவிந்தனர். சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சி, புதிய சாதனை படைத்து உள்ளது. விமான கண்காட்சிக்காக அதிக அளவில் கூட்டத்தை ஈர்த்ததற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்பது இந்தியர்களின் உலக சாதனைகளை ஆவணப்படுத்தி இந்தியாவில் வெளியிடப்படும் வருடாந்திர குறிப்பு புத்தகமாகும்.

இந்நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அக்டோபர் 8, 1932 இல் நிறுவப்பட்ட IAF இன் 92வது ஆண்டை கொண்டாடும் விதமாக விமான கண்காட்சி நடத்தப்பட்டது. .

சென்னை விமான கண்காட்சியின் தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி ஏர் வைஸ் மார்ஷல் கே பிரேம்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சாதனையை செய்வதற்காக கடந்த சில வாரங்களாக திட்டங்களை வகுத்தோம். முறையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பறவைகள் தாக்குவது கவலை அளிக்கும் விஷயமாக இருந்தது. இதனால் நிகழ்ச்சிக்கு முன் ஹெலிகாப்டர் உதவியுடன் ரேக்கி மேற்கொண்டோம்.

ஒரு வாரமாக ஒத்திகை மேற்கொண்டோம். IAF அதன் தாம்பரம் பிரிவின் ஒருங்கிணைப்பில் கீழ் முழு ஆடை ஒத்திகை நடத்தப்பட்டது. விமான கண்காட்சிக்காக சென்னை பெருநகர காவல்துறை சுமார் 6,500 போலீசாரும், 1,500 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழாவிற்காக கடற்கரையில் இருந்து சமீபத்தில் நிறுவப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உணவுக் கடைகள் மற்றும் சாய்வுதளம் ஆகியவை அகற்றப்பட்டன.

மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடும் வெயில் காரணமாக பாதிக்கப்பட்ட 60 வயது நபர் ஒருவர் நீர் இழப்பு ஏற்பட்டு இன்று மரணம் அடைந்தார். 60 க்கும் மேற்பாட்டோர் நீர் இழப்பு ஏற்பட்டு.. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+