Chennai Air Show: 5 பேர் மரணத்திற்கு ஸ்டாலின் தான் காரணம்! ’இது’ கூட தெரியாதா? எகிறி அடித்த எடப்பாடி
சென்னை: சென்னை மெரினாவில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பு காரணமாக தான் லட்சக்கணக்கானோர் கூடினர் எனவும், மெரினா மரணங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் காரணம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் செய்தியாளர்கள்டை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது பேசிய அவர்," இந்திய விமானப்படை 92வது துவக்க நாள் விழாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை காண மக்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

அதன்படி லட்சக்கணக்கான மக்கள் கூடினர். அரசு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத காரணத்தால் லட்சக்கணக்கானோர் மெரினா பீச்சில் கூடியதால் கூட்ட நெரிசலில் பலபேர் உயிரிழந்தனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்பத்திற்கு ஆளானார்கள். நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருவது செய்தி வாயிலாக தெரிகிறது.
முதலமைச்சரின் அறிவிப்பு காரணமாக தான் லட்சக்கணக்கானோர் கூடினர். எவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை உளவுத்துறை மூலம் தகவல் பெற்று தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் அடிப்படை வசதிகள் செய்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. முதலமைச்சரின் அறிவிப்பை நம்பி வந்த மக்களுக்கு துன்பம் தான் மீதம். அரசின் செயலற்றுத் தன்மை கையாளாகாத தன்மையை காட்டுகிறது இது வெட்கக்கேடான விஷயம், இதேபோன்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். அமைச்சர் இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்று கூறுகிறார்
அரசு என்றால் மக்களை பாதுகாக்க வேண்டும். இதற்கு முழு பொறுப்பு முதலமைச்சர் ஸ்டாலின் தான் ஏற்க வேண்டும். ஏனென்றால் இவர் தான் அழைப்பு விட்டார். இது அரசின் அலட்சியம். ஒரு நிகழ்ச்சியை கூட நடத்த முடியாத அரசாக உள்ளது. அரசின் கவனக்குறைவால் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து சாகச நிகழ்ச்சி பார்த்தனர்.
இந்த மாநில மக்கள் தான் ஓட்டு போட்டு முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த மாநிலத்தில் பணி புரியும் ஆசிரியர்கள் ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமை. அதிமுக ஆட்சியில் எட்டுத் திட்டம் இரண்டு 110 கிலோமீட்டர் 63,000 கோடி மத்திய அமைச்சரை அழைத்து வந்து ஒப்புதல் பெற்றோம்
முறையாக நிதி பெற்றிருந்தால் இத்திட்டத்தை முடித்து இருக்கலாம். முறையாக மத்திய அரசை அணுகி இருந்தால் உரிய நேரத்தில் நிதியை பெற்று எடுக்க முடியும். அதிமுக ஆட்சியில் மத்திய அரசு விளக்கமாக இருந்தோம். கொள்கை என்பது வேறு.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது நாட்டு மக்களை கடனாளியாக ஆக்கிவிட்டதாக ஸ்டாலின் கூறினார்.
இப்போது திமுக 40 மாத ஆட்சியில்முதல் 3.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். என்ன பெரிய திட்டத்தை கொண்டு வந்தனர். உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக கூறினார்கள். இப்போது இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது ஏமாற்று வேலை. வெளிநாடு சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு சென்றதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
டாஸ்மாக் அரசாங்க மூலம் விற்பனை செய்யப்படுவது, போதைப் பொருள் என்பது கள்ளத்தனமாக விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. திமுக ஆட்சி வந்தபோது அண்டை மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் எளிதாக கடத்தி வருந்து விற்பனை செய்கின்றனர். இதனால் இளைஞர்கள் மாணவர்கள் பாதிக்கப்படுவதை நான் தொடர்ந்து சட்டமன்றத்திலும் பேசி வருகிறேன். போதைப் பொருள் பயன்படுத்துவரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சேலத்தில் இப்போது ஊசி பயன்படுத்தும் கட்சியை தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. எனது சொந்த மாவட்டத்திலேயே போதை பொருட்கள் தடை இல்லாமல் கிடைப்பது வேதனை அளிக்கிறது. மாணவர்கள் இளைஞர்கள் போதைக்கு அடிமையானால் இந்த குடும்பம் சீரழிந்து விடும். நாட்டின் நன்மையை கருதி இளைஞர்கள் மாணவர்கள் பொதுமக்கள் நன்மை கருதி போதை பொருள் விற்பனை தடுத்து நிறுத்துமாறு கேட்கிறேன். இதில் சம்பந்தப்பட்டவர்களை பிடித்தால் ஆளுங்கட்சியின்னர் அவர்களை விடுவிக்க செய்கிறார்கள். இப்படி இருந்தால் எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்' என்றார்.












Click it and Unblock the Notifications