"ஜெமினி".. ஒரே ஆச்சரியம்..அண்ணா மேம்பாலத்தில் "கருணாநிதி"ய பாத்தீங்களா? வரலாறு இன்று - நின்று பேசுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் முக்கியமான அடையாளமாக இன்றுவரை திகழ்ந்து கொண்டிருப்பது அண்ணா மேம்பாலம் - இந்த மேம்பாலம் தன்னுடைய 50 ஆண்டை இன்றுடன் பூர்த்தி செய்கிறது.

அண்ணா சாலையில் இருக்கிறது இந்த மேம்பாலம்.. இந்த மேம்பாலத்தின் பக்கத்தில்தான், ஜெமினி ஸ்டுடியோ செயல்பட்டு வந்தது. 1970களில் இந்த ஸ்டுடியோ தென்னிந்தியாவிலேயே மிகப்பிரபலம்..

அதனால்தான், ஜெமினி பாலம் என்று இதை சொல்ல ஆரம்பித்தார்கள்.. அதற்கு பிறகு இந்த ஸ்டுடியோ இல்லாமல் போனாலும், இப்போது வரை ஜெமினி மேம்பாலம் மட்டுமே வழக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது,

Chennai Anna Flyover Bridge and one of the important landmarks of chennai by Kalaignar Karunanidhi

ஜெமினி: 1970களில் சென்னையில் வாகன பெருக்கம் அதிகமாகி கொண்டே போனது.. குறிப்பாக, அண்ணா சாலையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் அண்ணா சாலை- உத்தமர் காந்தி சாலை, கதீட்ரல் சாலை, ஜி.என். செட்டி சாலை சந்திப்பு பகுதியில் தினமும் 12 ஆயிரத்துக்கம் மேற்பட்ட வாகனங்கள் கடந்து சென்றன.. இந்த போக்குவரத்தை அப்போது தமிழக அரசால் சமாளிக்கவும் முடியவில்லை.

மேம்பாலம்: அதனால்தான், அந்த பகுதியில் ஒரு மேம்பாலத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.. அப்போதைய முதல்வர் கருணாநிதி, இந்த மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டினார்.. 1971-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பமாகின.. 1,500 டன் எக்கு, 3,500 டன் சிமெண்ட் கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டது..

போக்குவரத்தை சமாளிக்க இந்த பாலம் கட்டப்பட்டாலும், நிறைய முக்கியத்துவங்களை இந்த மேம்பாலம் பெற்றுவிட்டது.. தென்கிழக்கு ஆசியாவில் அமைந்த முதல் மேம்பாலம் இதுதான்.. மும்பையில் உள்ள கெம்ஸ் கார்னர், மரைன் டிரைவ் ஆகிய இடங்களில் அமைந்த மேம்பாலங்களை தொடர்ந்து, இந்தியாவில் கட்டப்பட்ட 3-வது மேம்பாலமும் இதுதான்.. நம் நாட்டின் மிக நீளமான மேம்பாலமும் இதுதான்.

கருணாநிதி: ரூ.66 லட்சம் செலவில், வெறும் 21 மாதங்களில் கட்டிமுடித்தது கலைஞர் ஆட்சி.. 1973-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி, முதல்வர் கருணாநிதி இந்த பாலத்தை திறந்து வைத்தார்.

அதற்கு "அண்ணா மேம்பாலம்" என்று பெயரும் சூட்டினார். மேம்பாலத்தின் அடியில் அண்ணா புத்தகம் வாசிப்பது போன்ற சிலையையும் வைத்தார்.. இதற்கு பிறகு, பெரியார் மறைவுக்கு பிறகு 1974-ம் ஆண்டு அவரது பிறந்த நாளின் போது மேம்பால பகுதியில் அவரது சிலையை நிறுவ அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் கோரிக்கை வைக்கவும், அதற்கு அனுமதி தந்து, சிலை வைத்தார் கருணாநிதி..

கிண்டி குதிரை: முதலமைச்சர் கருணாநிதிக்கு, எம்ஜிஆர் இதற்காக அப்போது தன் நன்றியை உரித்தாக்கியிருந்தார்.. இதைத்தவிர, சென்னையில் குதிரை பந்தயம் தடை செய்யப்பட்டதை நினைவுகூறும் வகையில் குதிரையை அடக்கும் வீரனின் சிலைகள் மேம்பால பகுதியில் 2 பக்கங்களில் நிறுவப்பட்டன..

Chennai Anna Flyover Bridge and one of the important landmarks of chennai by Kalaignar Karunanidhi

இப்படிப்பட்ட சரித்திரத்தை கொண்ட, அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.. சென்னை இப்போது மேம்பாலங்களின் நகரம் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அனைத்துக்கும் முதல் விதையாக விளங்கி கொண்டிருப்பது இந்த அண்ணா மேம்பாலம் தான்.

கம்பீரம்: ரூ.8.85 கோடி செலவில் மேம்பாலம் சீரமைக்கப்பட்டு விரைவில் ஜொலிக்கப்போகிறது.. இன்னும் நூற்றாண்டுகளை கடந்தாலும், பல்லாயிரக்கணக்கான வாகனங்களை தாங்கி கொண்டு, சென்னையின் அடையாளமாகவும், கர்வமாகவும் இந்த அண்ணா மேம்பாலம் எப்போதுமே, நிமிர்ந்து நிற்கும் கம்பீரமாய்.. ஒய்யாரமாய்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+