வசமாய் சிக்கிய ‘சார்’.. அண்ணா நகர் சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்! பஞ்சாயத்து பேசிய அதிமுக சுதாகர்
சென்னை: சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகளான சுதாகர் என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக நிர்வாகி இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குற்றவாளிகளிடம் இருந்து பணம் வாங்கி தருவதாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் புகார் அளித்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியதாகவும், புகாரிலிருந்து ஒரு சிறுவனின் பெயரை நீக்க வேண்டும் என தங்களை தாக்கியதாக சிறுமியின் தாய் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
சிறுமி வன்கொடுமை:
இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும் சிறுமியின் பெற்றோரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டபோது சிபிஐ விசாரணைக்கு தடை விதித்த நீதிமன்றம் தமிழகம் அல்லாத ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழு:
இதனையடுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் இந்த வழக்கில் அதிமுகவின் 103வது வட்ட செயலாளர் சுதாகர், சென்னை அண்ணாநகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து இருக்கிறது. புகார் அளிக்க வந்தவரை தாக்கியதோடு புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத புகாரில் ராஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக நிர்வாகி கைது:
இந்த நிலையில் அதிமுக பிரமுகர் சுதாகர் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்தான தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். அதில் குற்றவாளி தரப்பு சுதாகரை அணுகி உள்ளது. அப்போது கட்டப்பஞ்சாயத்து பேசி இருக்கிறார் சுதாகர். மேலும் புகாரில் சிறுவன் ஒருவனின் பெயரை குறிப்பிடக் கூடாது பாதிக்கப்பட்ட சிறுமியின் நடந்ததை சிறுமிக்கு நடந்ததை வெளியே சொல்ல கூடாது என மிரட்டியதோடு புகார் அளிக்காமல் இருந்தால் பாதிக்கப்பட்ட சிறுமைக்கு பல லட்சம் ரூபாய் பணம் பெற்று தருவதாக சுதாகர் பேசியிருக்கிறார்.
கட்டப்பஞ்சாயத்து:
தொடர்ந்து சிறுமியின் பெற்றோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த இந்த தகவல் தெரிய வந்ததையடுத்து சுதாகர் கைது செய்யப்பட்டதாக சிறப்பு புலனாய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் சுதாகர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் யார் அந்த சார்? என அதிமுகவினர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இவர்தான் அந்த சார் என திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications