கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில்.. "இருட்டில்" யாருங்க அந்த பரிதாப பெண்? அண்ணாநகர் வாடகை வீட்டில் அக்கப்போர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இளம்பெண் ஒருவர், நேற்று நள்ளிரவில் சுற்றி சுற்றி வந்திருக்கிறார்.. நம் போலீசாரிடம் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோதுதான், அந்த கேவலமான விஷயமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும், பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதை குற்றமாக்கும் சட்டத்தை நீக்க வேண்டும், இந்த தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை பாலியல் தொழிலாளர்கள் பல காலமாகவே முன்வைத்து வருகின்றனர்.

Chennai Anna Nagar Rental House prostitution and Do you know who is this kenyan women in Koyambedu Bus Stand

விபச்சாரம்: அதேசமயம், விபச்சார தொழிலையும் கைவிடாமல் காசு பார்த்து வருகின்றனர்.. சட்டவிரோதமாக இதுபோன்ற செயல்படுவோரை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் போலீசார் இறங்கி வருகிறார்கள்..

அந்தவகையில், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை சொல்லியும், சினிமாவில் சான்ஸ் தருவதாக சொல்லியும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்களை அடிக்கடி அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இந்த பெண்கள் பெரும்பாலும் படித்த பட்டதாரிகள் ஆவர்.. தங்கள் குடும்ப சூழல் கருதி, உயிருக்கு பயந்து கொண்டு, விபச்சார கும்பல்களிடம் சிக்கி கொண்டு விடுகிறார்கள்..

கும்பல்: இவர்களை கண்டறிந்து மீட்பதுடன், இப்பெண்களின் வாழ்வை சிதைக்கும் நபர்களையும் நம்முடைய போலீசார் கைதுசெய்து வருகிறார்கள். அப்படித்தான், இப்போதும் ஒரு கும்பல் சிக்கி உள்ளது..

கென்யா நாட்டைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் கரோலீன் நகுலா.. 30 வயதாகிறது.. இவரது ஆண் நண்பர் பெயர் கனட்டா.. இவரும் கென்யா நாட்டை சேர்ந்தவர்தான்..

சென்னை: சென்னையில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை வாங்கித்தருவதாக சொல்லி, இந்த பெண்ணை சென்னைக்கு அழைத்துள்ளார்... கடந்த ஜுன் மாதம் சுற்றுலா விசாவில் கரோலீன் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.. சென்னை அண்ணாநகரில், தன்னுடைய சக நாட்டு பெண்களுடனேயே தங்கி வேலை பார்த்தும் வந்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில், நேற்றிரவு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் கரோலின் சுற்றி சுற்றி வந்திருக்கிறார்.. மிட்நைட்டில் அயல்நாட்டு பெண், பஸ் ஸ்டாண்டில் சுற்றி வருவதை ரோந்து போலீஸார் பார்த்துள்ளனர்.. பிறகு அவரிடம் சென்று விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது கரோலின், அண்ணாநகர் வீட்டை சொல்லாமல், கீழ்ப்பாக்கத்தில் தங்கியிருப்பதாக சொன்னார்.. உடனே அவரை கீழ்ப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டுபோய், கோயம்பேடு போலீஸார் ஒப்படைத்திருக்கிறார்கள்.

விசாரணை: இப்போது கீழ்ப்பாக்கம் போலீஸார், கரோலினிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், பல பகீர் தகவல்கள் வெளியானது. அந்த ஆண் நண்பர் கனட்டா, கரோலினை மோசமாக ஏமாற்றியிருக்கிறார்.. சென்னையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி வரவழைத்து, பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துவிட்டாராம். அண்ணாநகரில் வீடு எடுத்ததும் பாலியல் தொழிலுக்காகத்தானாம்..

அந்த வீட்டில் கரோலினுடன் தங்கியிருந்த கென்யா பெண்களும், இப்படித்தான் கனட்டாவிடம் ஏமாந்து போயிருக்கிறார்கள். மொத்தம் 4 கென்யா பெண்களை, சென்னைக்கு வரவழைத்து, அண்ணாநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தந்து, பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.. இதனால் அந்த பெண்களுக்கும், கரோலினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு: எனவே, தன்னுடைய துணிமணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, சொந்த நாட்டிற்கு கிளம்ப முடிவெடுத்துள்ளார் கரோலின். அண்ணாநகர் வீட்டிலிருந்து கோபத்தில் கிளம்பி, பெட்டி படுக்கையுடன் கோயம்பேட்டுக்கும் வந்துவிட்டார்.. ஆனால், கையில் காசு இல்லை..

அதனால்தான், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலேயே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாராம். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, கீழ்ப்பாக்கம் போலீஸார், கரோலினை, வேப்பேரியில் உள்ள தனியார் பெண்கள் விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆண் நண்பர்: சொந்த நாட்டு பெண்கள் என்றுகூட பாராமல், இன்னொரு நாட்டில் வந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அந்த கனட்டாவை போலீசார் இப்போது தேடி கொண்டிருக்கிறார்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+