அசோக் நகர் ரோட்டில் காரில் ஹேப்பியாக இருந்த ஜோடி! கேமராவில் பதிவான பெண் யார்? சென்னையில் அதிர்ச்சி
சென்னை: சென்னை அசோக் நகர் ரோட்டில் காரில் கள்ளக்காதலியுடன் ஜாலியாக இருந்துள்ளார் புதுச்சேரி அரசு ஒப்பந்ததாரர்.. திடீரென பைக்கில் 4 பேர் வந்திருக்கிறார்கள்.. அப்போதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த 4 பேரையும் இப்போது தேடி கொண்டிருக்கிறார்களாம்.. அங்கிருந்த கேமராவில் ஒரு பெண்ணின் உருவமும் பதிந்துள்ளது.. அந்த பெண் யார்?
சென்னை அசோக் நகர் 4-வது பிரதான சாலையில், நேற்றைய தினம் ஒரு சொகுசு கார் நின்று கொண்டிருந்தது... அந்த காரில் இளம்பெண்ணும், இளைஞரும் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது திடீரென 2 பைக்குகளில் 4 பேர் வந்திறங்கினார்கள்.. அந்த கார் கதவை திறந்து இளைஞரை மட்டும் தரதரவென வெளியே இழுத்து, சரமாரியாக தாக்கினார்கள்.. பிறகு, கத்தியால் அவரை குத்தி கொன்றார்கள்.. இதில் அந்த இளைஞர் அங்கேயே துடிதுடித்து இறந்துவிட்டார்.. அதற்கு பிறகு அந்த 4 பேரும், பைக்குகளில் பறந்து சென்றுவிட்டனர்.
சென்னையில் அதிர்ச்சி
இதையடுத்து அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டவர்கள்.. கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞர் புதுச்சேரியை சேர்ந்த 38 வயது பிரகாஷ் என்பதும், அரசு ஒப்பந்த பணிகளை டெண்டர் எடுத்து செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவை பறிமுதல் செய்த போலீசார், அதனை அடிப்படையாக வைத்து கொலையாளிகள் 2 பெண்கள் உட்பட 3 பேரை கண்டுபிடித்தனர்.. அவர்கள், வந்தவாசி மாவட்டத்தை சேர்ந்த கடலூர் போக்குவரத்து துறையில் பணியாற்றும் தனஞ்செழியன் (42), அவரது மனைவி சுகன்யா (37) சுகன்யாவின் தோழி குணசுந்தரி (27) என்பதும் தெரிய வந்துள்ளது.
இறுதியில், சம்பந்தப்பட்ட 3 பேருமே போலீசின் விசாரணை வளையத்துக்குள் வந்தனர்... அப்போதுதான் இது கள்ளக்காதலால் நடந்த கொலை என்பது தெரியவந்தது.
சென்னை அசோக் நகர்
இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "பிரகாஷூம், சுகன்யாவும் பள்ளி நண்பர்கள். இருவரும் ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார்கள்.. ஆனால், சுகன்யாவின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், தனஞ்செழியன் என்பவருக்கு சுகன்யாவை திருமணமும் செய்து தந்துள்ளனர்.
இதனால் புதுமண தம்பதி இருவரும் சென்னை ஜாபர்கான் பேட்டையில் வசிக்க துவங்கினர் என்றாலும், திருமணத்துக்கு பிறகும் சுகன்யா, பிரகாஷின் கள்ளக்காதல் நீடித்தது..
இந்த விஷயம் புது மாப்பிள்ளை தனஞ்செழியனுக்கு தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.. மனைவியையும் கண்டித்துள்ளார்..
காரில் ஜோடி ஹேப்பி
ஆனால், சுகன்யா தனஞ்செழியன் பேச்சை கேட்கவில்லை.. இதனால் மனம் நொந்துபோன தனஞ்செழியன், குடிப்பழக்கத்துக்கு ஆளாகிவிட்டார்.. இந்த குடிப்பழக்கத்தையே சாக்காக வைத்து, சுகன்யாவும், கணவரை பிரிந்து புதுச்சேரியிலுள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.. அப்போதிருந்து பிரகாஷூம், சுகன்யாவும் தடையின்றி அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், டெண்டர் விஷயமாக சுகன்யாவை அழைத்துக்கொண்டு பிரகாஷ் சென்னைக்கு வந்திருக்கிறார்.. அப்போதுதான் அசோக்நகரில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து இருவரும் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.. இந்த விஷயத்தை சுகன்யாவின் தோழி குணசுந்தரி, தனஞ்செழியனுக்கு சொல்லி உள்ளார்..
போலீஸ் வலை
இதைக்கேட்டு கொதிப்படைந்த தனஞ்செழியன், தன்னுடைய நண்பர்கள் 3 பேர் மற்றும் குணசுந்தரியுடன் அசோக்நகருக்கு சென்றிருக்கிறார்..
அங்கே 4வது பிரதான சாலையில் பிரகாஷூம், சுகன்யாவும் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்து கடுங்கோபம் கொண்டார்.. பிறகு நண்பர்களுடன் சேர்ந்து பிரகாஷை கத்தியால் குத்தி கொன்றார்.. பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் இறந்ததுமே, அதிர்ச்சியில் உறைந்து நின்ற சுகன்யாவை தன்னுடனே தனஞ்செழியன் அழைத்து சென்றுள்ளார்.. இவ்வளவும் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.. தனஞ்செழியனுடன் வந்த 3 பேரை தேடி வருகிறோம்" என்றனர்.












Click it and Unblock the Notifications