சென்னை வேளச்சேரி- கடற்கரை ரயில் சேவைக்கு பாதிப்பா? கடற்கரை- எழும்பூர் 4வது பாதையால் புதிய சிக்கல்
சென்னை: சென்னை கடற்கரை-எழும்பூர் இடையிலான 4-வது வழித்தட பணிகள் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், கடற்கரை வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் புறநகர் ரயில்சேவைகள் மக்களி அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிப்போய் உள்ளது. கடற்கரை -தாம்பரம் - செங்கல்பட்டு, சென்ட்ரல்- அரக்கோணம், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, கடற்கரை- திருவெற்றியூர், கடற்கரை-வேளச்சேரி என புறநகர் ரயில் சேவை சென்னையில் முக்கியமான அனைத்து பகுதிகளையும் இணைக்கிறது.

இதில் கடற்கரை-வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் பாதை, சென்னையின் இதயப்பகுதியை இணைக்கும் ரயில் சேவையாகும். சென்னையில் ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள வேளச்சேரி, பெருங்குடி, ஓஎம்ஆர், திருவான்மியூர் பகுதியை பறக்கும் ரயில் சேவை தான் இணைக்கிறது. மெரினா கடற்கரை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாகத்தை இணைக்கும் பறக்கும் ரயில் சேவை ஒரு நாள் ரத்தனால் கூட மிகப்பெரிய பாதிப்பினை சென்னை சந்திக்கும்.
விரைவில் பறக்கும் ரயில் சேவை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு நீடிக்கப்பட உள்ளது. இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. வேளச்சேரி பரங்கிலை மலை இடையே சேவை தொடங்கும் நாள், சென்னைக்கு மிகப்பெரிய நல்ல நாளாக இருக்கும். மொத்த சென்னை மக்களுக்கும் போக்குவரத்து சேவை மிக எளிதாகிவிடும். தாம்பரத்தில் இருந்து பலரும் ரயில் போக்குவரத்து வழியாக ஓம்ஆர் வர முடியும் என்பதால் மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் சென்னையை பொறுத்தவரை கடற்கரை மற்றும் தாம்பரம் ஆகிய இடைப்பட்ட பகுதியில் எழும்பூர் வரை தான் நான்கு பாதைகள் உள்ளன. ஆனால் கடற்கரை முதல் எழும்பூர் வரை மூன்று பாதைகள் மட்டுமே உள்ளன. இதனால் ஆந்திரா மற்றும் வட சென்னை பகுதிகளுக்கு போதிய ரயில்கள் இயக்க ரயில்வேக்கு சிரமம் உள்ளது. இதன் காரணமாக எழும்பூர் மற்றும் கடற்கரை இடையே 4 வது ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அண்மையில் பறக்கும் ரயில் சேவையை சேப்பாக்கம் வரை மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு சென்னையில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து வேளச்சேரி- கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை எப்போதும் போல் இயங்கி வருகிறது.
இந்நிலையில் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, சென்னை கடற்கரை-எழும்பூர் வரையிலான 4-வது வழித்தட பணிகள் இம்மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். இந்த பணிகளின் போது செயல்படுத்தப்படும் போக்குவரத்து மாற்றம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
இதன் காரணமாக வேளச்சேரி-கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் சென்னைவாசிகளிடையே எழுந்துள்ளது. வேளச்சேரி கடற்கரை ரயில் சேவைக்கு பாதிப்பு இல்லாமல் 4வது வழித்தட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேநேரம் குறைந்த பட்சம் கோட்டை வரை ரயில்களை இயக்க வேண்டும் என்றும், அதன்பிறகு பணிகளை நிறைவேற்ற சென்ட்ரல் சந்திப்பான பூங்கா வரை இயக்க வேண்டும். இப்படி செய்து பணிகளை முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. பூங்கா அல்லது கோட்டை வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டால் மக்கள் வேறு ரயில்களுக்கு மாறி செல்ல எளிதாக இருக்கும் என்றும், சேப்பாக்கம் அல்லது சிந்தாதிரிப்பேட்டையில் நிறுத்தினால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மக்கள் கூறினார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications