சென்னை தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 53 மின்சார ரயில்கள் இன்று ரத்து- கூடுதல் வழித்தடங்களில் 'மெட்ரோ’
சென்னை: சென்னை தாம்பரம்- செங்கல்பட்டு இடையே இன்று 53 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கூடுதல் வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.
சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், சென்னை கடற்கரை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கான மின்சார ரயில்கள் மூலம் மாணவர்கள், தொழிலாளர்கள் பயனடைகின்றனர்.

சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம்- செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 10.18 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரையிலும் ரத்து செய்யப்படும்; சென்னை கடற்கரைக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் காலை 9.08 மணி முதல் 3.20 மணி வரை ரத்து செய்யப்படும்.
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரை ரத்து செய்யப்படுகிறது; காஞ்சிபுரம், திருமால்பூரில் இருந்து காலையில் புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் மின்சார ரயில் சேவைகள் ஒரே நாளில் பெருமளவு ரத்து செய்யப்படுவதால் பொதுமக்கள் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவைகள் கூடுதல் வழித்தடங்களில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications