Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை நவம்பர் முதல் ஆரம்பம்.. பார்க்கில் நடக்கும் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர்-கடற்கரை நான்காவது ரயில் பாதை திட்டத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை துண்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை, மீண்டும் இயல்பு நிலைக்கு வரப்போகிறது. சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவைகள் வரும் நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த தகவலை தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி எம்.செந்தமிழ் செல்வன் உறுதி செய்துள்ளார்.

சென்னையில் மிகவும் முக்கிய மின்சார ரயில் வழித்தடம் என்றால் அது, சென்னை கடற்கரை வேளச்சேரி வழித்தடம் தான். இந்த வழித்தடத்தில் தான் சென்னை கோட்டை (தலைமை செயலகம்), சிந்தாரிப்பேட்டை (அரசின் ஓமந்தூரார் மருத்துவமனை), சேப்பாக்கம் (கிரிக்கெட் ஸ்டேடியம், அண்ணா சதுக்கம்), திருவல்லிக்கேணி (மெரினா கடற்கரை, பார்த்த சாரதி கோயில்), கலங்கரை விளக்கம் (மெரினா கடற்கரை, டிஜிபி ஆபிஸ், ராணிமேரி கல்லூரி) ஆகியவை உள்ளன. இதேபோல் மயிலாப்பூர், மந்தைவெளி, கோட்டூர்புரம், அடையாறு, திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி என சென்னையின் தகவல் தொழில்நுட்ப பகுதிகளை இணைக்கிறது. சென்னையில் ஐடி நிறுவனங்கள், கார்ப்பேரேட் நிறுவனங்கள் அண்ணா சாலை முதல் வேளச்சேரி வரை உள்ள பகுதிகளில் தான் அதிகமாக உள்ளன.

velachery mrts

இதன் காரணமாகவே சென்னை மின்சார ரயில் போக்குவரத்தில் கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடம் முக்கியத் தடமாக திகழ்கிறது. சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், பறக்கும் ரயில் வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வழித்தடத்தில் நாள்தோறும் 80 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. முன்னதாக சென்னை கடற்கரை வரை ரயில் சென்று வந்தபோது தினசரி 150 ரயில் சேவை இயங்கி வந்தது.

இந்த ரயில் சேவைகளால் வேளச்சேரி பகுதியில் மட்டும், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வேளச்சேரி ரயில் வழித்தடத்தில் சிந்தாரிப்பேட்டை முதல் கடற்கரை வரை பணிகள் முடிந்து எப்போது ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

அண்மையில் மெரினாவில் விமானப்படை சாகசம காரணமாக வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் கூடினார்கள். வேளச்சேரி ரயில் நிலையம் இதுவரை காணாத கூட்டத்தை கண்டது. இதையடுத்து கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றும், கடற்கரை சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் பணிகள் காரணமாக கூடுதல் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தெற்கு ரயில்வேயை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஏனெனில் சிந்தாதிரிப்பேட்டை-கடற்கரை இடையே கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட போது, அடுத்த 6 மாதத்தில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே கூறியது. ஆனால் சொன்னபடி ஆரம்பிக்கவில்லை.. ஓராண்டை தாண்டிவிட்டது. இதனால் பலரும் அவதிப்படும் நிலை தொடர்கிறது. நடைமேடை இடிப்பு காரணமாக சிந்தாதிரிப்பேட்டையைத் தாண்டி,பார்க் மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் தரையிரங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது..

இந்நிலையில் பார்க் மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் தற்போது கிட்டத்தட்ட பணிகள் முடிந்துவிட்டது. தற்போது நடைமேடைகளை அமைப்பது மற்றும் மக்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல மேம்பாலங்கள் அமைப்பத என சில குடிமராமத்து பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணிகளை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதேநேரம் பணிகளை விரைவாக முடித்து நவம்பர் முதல் வாரத்தில் இருந்து கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையே வழக்கம் போல் மின்சா ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த தகவலை தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி எம்.செந்தமிழ் செல்வன் உறுதி செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+