சென்னையில் பீகார் குடும்பம் படுகொலை! கவுரவ் குமார் மனைவியின் உடல் எங்கே? 2ஆவது நாளாக தேடும் போலீஸ்
சென்னை: சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த பீகாரை சேர்ந்த இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த இளைஞரின் மனைவியின் உடலை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் கடந்த ஜனவரி 26ஆம் தேதி, சாக்கு மூட்டையில் ரத்தம் வழிய ஒரு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பதும், அவர் சென்னை தரமணியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாகப் பணியாற்றி வந்ததும், அந்த வளாகத்திலேயே அங்கு தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் வசித்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் சாக்கு மூட்டையை வீசிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, கவுரவ் குமாரின் நெருங்கிய நண்பர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட ஏழு பேரைப் பிடித்து போலீசார் நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வாக்குமூலம்
அவர்களின் வாக்குமூலங்கள், இவ்வழக்கில் முக்கியத் திருப்பத்தைக் கொடுத்தன. தீவிர விசாரணையின்போது, கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கவுரவ் குமாரின் மனைவி மற்றும் அவரது இரண்டு வயது குழந்தையையும் கொலை செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.
சென்னை பீகார் கொலை
ஏற்கனவே அளித்த வாக்குமூலங்களின்படி, இரண்டு வயது குழந்தையின் சடலத்தை போலீசார் மீட்டனர். இருப்பினும், பெண்ணின் சடலம் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை. எனவே, அடையாறு கெனல் ரோடு, கூவம் ஆற்றங்கரைப் பகுதிகள், பெருங்குடி குப்பை கிடங்கு உள்ளிட்ட இடங்களில் போலீசார் தேடுதல் பணிகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளனர். கடந்த 26ஆம் தேதியே குற்றம் நடந்தாலும் அன்று முதல் அந்த இளைஞர் யார் என்று தேடப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் அந்த இளைஞரின் நண்பர்கள் கைதான போதுதான் மனைவியையும் குழந்தையையும் கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் அந்த இருவரின் சடலங்களையும் தேடினர். அப்போது குழந்தையின் உடல் கிடைத்துவிட்டது.
இரண்டாவது நாள் தேடல்
இந்த நிலையில் கவுரவின் மனைவியின் உடல் இன்று இரண்டாவது நாளாக போலீஸார் தேடி வருகிறார்கள். தலைநகரையே உலுக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி கூறியிருப்பதாவது: இந்த படுகொலை செய்தவர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்றார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது: சென்னை அடையாறு பகுதியில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கொண்ட கும்பல், அதைத் தடுக்க வந்த அவரது கணவர், 2 வயது குழந்தை ஆகியோரை படுகொலை செய்ததுடன், இளம்பெண்ணையும் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறது. அமைதியான நகரம் என்று பெயர் பெற்ற சென்னையை வாழத்தகுதியற்ற கொலைநகரமாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பீகார் இளைஞர் கொலை
அடையாறு பகுதியில் முதலில் பிகார் இளைஞர் ஒருவர் மட்டும் தான் முதலில் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அடுத்தடுத்து வெளியான செய்திகள் திகில் படத்தின் காட்சிகளுக்கு இணையாக உள்ளன. பிகார் இளம்பெண்ணையும், அவரது கணவர் மற்றும் குழந்தைகளையும் படுகொலை செய்த அந்தக் கொடூரக் கும்பல், அத்துடன் நிற்காமல் மூவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றிருக்கிறது. இப்படி ஒரு கொடூரத்தை நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடிய 48 மணி நேரத்திற்குள் இந்தக் கொடூரம் குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று பெயர்பெற்ற மாநிலத்தி்ற்கு வாழ்வாதாரம் தேடி வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், குடும்பத்தையே கொலை செய்யும் நிலை நிலவுகிறது என்றால் தமிழகத்தில் எவ்வளவு மோசமான ஆட்சி நடக்கிறது? என்று உலகம் காறி உமிழாதா?
இவ்வளவு மோசமான ஆட்சியை நடத்திக் கொண்டு, தமிழ்நாடு தான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் என்று கூறுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நா கூசவில்லையா? திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமான கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பொருள்களை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுக ஆட்சியில் கஞ்சா வணிகர்கள் தான் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியும்; திமுக அரசு நீடிக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமாக திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற அவர்கள் காத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications