சென்னையில் பயங்கரம்.. அப்படியே விழுந்து அமுக்கிய வீட்டின் மேல் தளம்.. தாய், மகள் பரிதாப பலி
சென்னை: வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து தாய் , மகள் பலியான சம்பவம்,
சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
புளியந்தோப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கன்னிகாபுரம், வெங்கடேசபுரம் கால்வாய் ரோடு பகுதியில் வசிப்பவர் வெங்கடேசன் (35). இவரது மனைவி பெயர் சங்கீதா (31) , இவர்களுக்கு யுவஸ்ரீ (7) , கிருஷ்ணகுமார் (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

வெங்கடேசன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் 2 வருடமாக வசித்து வருகிறார்.
நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு, வீட்டில் உள்ள அனைவரும், படுத்து தூங்கத் தொடங்கினர். நல்ல தூக்கத்தில் இருந்தபோது, திடீரென, வீட்டின் மேல் தளம் இடிந்து வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த சங்கீதா, யுவஸ்ரீ ஆகியோர் மீது விழுந்துள்ளது.
இந்த கொடுமையான சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே சங்கீதா இறந்து விட்டார். பெண் குழந்தையான யுவஸ்ரீ அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்பு அங்கு சிகிச்சை பலனின்றி யுவஸ்ரீ உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புளியந்தோப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கட்டிடம் மிகவும் பழமையானது என்பதே இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications