சென்னை கோவை வந்தே பாரத்! என்னா ஸ்பீடு.. பிளேனே தோத்துரும்.. பயணிக்கும் ஆர்வத்தில் ஏதேதோ சொன்ன வானதி
சென்னை: சென்னை கோவை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொங்கி வைக்கும் நிலையில், அதில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பயணித்தார். இது குறித்து அவர் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார்.
இன்றைய தினம் பிரதமர் மோடி பெரிதும் எதிர்பார்க்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையையும் தொங்கி வைத்தார். வந்தே பாரத் என்பது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலாகும். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில், தானியங்கி கதவுகள், அதிவேக வைபை உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது.

சென்னை கோவை வந்தே பாரத்: வரும் காலங்களில் நாட்டில் மேலும் பல வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் இருக்கும் நிலையில், இரண்டாவது ரயிலாக சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது
சென்னை கோவை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொங்கி வைக்கும் நிலையில், அதில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பயணித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "முதல் வந்தே பாரத் ரயிலில் பயணிப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. ரயில் பயணம் என்பது எப்போதும் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக் கூடியது.
இது எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பவே மகிழ்ச்சியை தருகிறது. நான் கோவை எம்எல்ஏவாக இருக்கும் போது, தமிழகத்திற்குள் இயங்கும் இந்த சென்னை கோவை வந்தே பாரத் ரயிலை இயக்கியது மிகவும் மகிழ்ச்சி. முதல் நாளில் பயணிப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நான் 2016ஆம் ஆண்டு சீனா சென்ற போது, அங்குள்ள புல்லட் ரயிலிலும் சென்றுள்ளேன். புல்லட் ரயிலில் பயணிக்கும் போது, என மனதில் ஒரு ஏக்கம் இருந்தது. நமது நாட்டில் எப்படி இதுபோன்ற அதிநவீன ரயில்களை வரும் என்று நினைத்து ஏங்கினேன். இப்போது அந்த கனவு நனவாகி இருக்கிறது.
அதிலும் நம்ம பெரம்பூரில் தயாரிக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில்கள் தான் இந்தியா முழுக்க செல்கிறது என்பது நமக்கு கூடுதல் பெருமை. இதில் வைபை தொடங்கி பல்வேறு வசதிகள் இருக்கிறது. இரவில் பயணிக்கும் வந்தே பாரத் ரயில்களும் மிக விரைவில் வரவுள்ளது.
விமான நேரத்திற்கு இணையாக அதே வசதிகளுடன் இந்த வந்தே பாரத் இருக்கிறது. வீட்டில் அமர்ந்து புக் படித்துக் கொண்டே செல்வது போலவே இந்த வந்தே பாரத் ரயில்கள் இருக்கிறது" எனறார்.
வந்தே பாரத் ரயில் மற்றும் ஏற்கனவே சென்னையில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களிடையே பெரிய நேர வித்தியாசம் இல்லை. மிஞ்சிப்போனால் 45 நிமிடங்கள் அல்லது அரை மணி நேரம்தான் வித்தியாசம். எக்ஸ்பிரஸ் ரயில்கள் கூடுதல் ஸ்டேஷனில் நின்று செல்வது தாமதத்திற்கு மற்றும் ஒரு காரணம். வந்தே பாரத் அத்தனை ஸ்டேஷன்களில் நிற்பது கிடையாது. கூட்டி கழித்து பார்த்தால், மணிக்கு 83 கி.மீதான், சென்னை கோவை வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம். ஆனால் விமானத்திற்கு ஈடாக இந்த வந்தே பாரத் ரயில் கோவையை சென்று சேரும் என்று வானதி சீனிவாசன் சொன்னதும், அதிவேகமாக பயணிக்க கூடிய புல்லட் ரயிலை இதனுடன் ஒப்பீடு செய்ததும் சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
ரயிலின் கடைசி பெட்டியில் ஏன் X இருக்கு? இது தெரியாம போச்சே! பெட்டிகளின் கலரில் பின்னணியில் சீக்ரெட் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications