சென்னை ஆட்சியர் அமிர்த ஜோதி பணியிட மாற்றம்.. புதிய கலெக்டராக அருணா ஐ.ஏ.எஸ் நியமனம்
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார். நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள், துறைகளின் செயலாளர்கள் உள்பட உயர் அதிகாரிகள் அவ்வப்போது மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக ஐ.ஏ.எஸ் அதிகாரி அருணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications