சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உனக்கு ஓகேவா".. ராத்திரி நேரத்தில் மர்ம போன்கள்.. ஒரு மணி நேரத்தில் 20 கால்கள்.. குமுறும் பெண்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: "உனக்கு ஓகேவா" என்று கேட்டு, ராத்திரி நேரங்களில் மர்மநபர்கள் போன் செய்கிறார்களாம்.. ஒரு மணி நேரத்துக்கு 20 போன்கள் வருவதாகவும், அசிங்கமாக, ஆபாசமாக பேசி குடும்ப பெண்களை விபச்சாரத்திற்கு அழைக்கிறார்களாம்.. இப்படி ஒரு பகீர் புகார் சென்னையில் எழுந்துள்ளது..

சென்னை அம்பத்தூர் ஓரகடம் பகுதியில் வசித்து வருகிறார் அந்த கல்லூரி மாணவி.. இவரது பெயரில் ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் தன்னை பாலியல் தொழில் செய்யும் பெண் எனவும் தன்னை தொடர்புகொள்ளுமாறும் பதிவிட்டு, ஒரு போன் நம்பரும் தரப்பட்டுள்ளது.

அதே போல விபச்சாரம் செய்வதாக கூறி அந்த பகுதி பெண்களின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களது பெயரையும், செல்போன் நம்பரையும் யாரோ பதிவிட்டுள்ளனர்.

புதிய தளர்வுகளுடன்.. தமிழகத்தில் லாக்டவுன்.. ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு?புதிய தளர்வுகளுடன்.. தமிழகத்தில் லாக்டவுன்.. ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு?

 சபலிஸ்ட்டுகள்

சபலிஸ்ட்டுகள்

இதனால் இந்த பெண்களின் நம்பர்களுக்கு ஒரு நாளைக்கு 100 பேருக்கு மேல் போன்கள் வந்துள்ளன.. இதை பார்த்து பதறி போன சம்பந்தப்பட்ட பெண்கள், அந்த போனை எடுக்காமல் இருந்திருக்கிறார்கள்.. ஆனால் சபலிஸ்ட்டுகள், வாட்சப் கால், வீடியோ கால் என தொடர்ந்து போன் செய்தபடி இருந்திருக்கிறார்கள்.

 வீடியோ கால்

வீடியோ கால்

இந்த வீடியோ கால்களையும் பெண்கள் எடுக்காமல் விட்டுவிட்டனர்.. இதையடுத்து, அந்த சபலை ஆசாமிகள், தங்கள் போட்டாக்களை அனுப்ப ஆரம்பித்துவிட்டார்களாம்.. "ஓகே..வா" என்றும் கேட்டுள்ளனர்.. இதை எல்லாம் வெளியே சொன்னால், தங்களை பற்றி தவறாக நினைத்து விடுவார்கள் என்ற பயத்தில் இந்த பெண்களும் வெளியே சொல்லாமலேயே இருந்திருக்கிறார்கள்.

பெற்றோர்

பெற்றோர்

இதில் ஏராளமான குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் அடக்கம்.. புருஷனுக்கு தெரிந்தால் குடும்பமே நாசமாகும் என்று சொல்லாமல் விட்டிருக்கிறார்கள்.. பெற்றோருக்கு பயந்து மாணவிகளும் சொல்லவில்லை.. ஆனால், இது எல்லை மீறி போகவும்தான் அம்பத்தூர் கல்லூர் மாணவி பெண் அம்பத்தூர் கல்லூரி மாணவி அம்பத்தூர் ஸ்டேஷனுக்கு புகார் தந்துள்ளார்.. ஆனால், ஆனால் கொரோனா காரணமாக அந்த புகாரை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

அழைப்புகள்

அழைப்புகள்

அதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் அந்த பெண் அக்கம் பக்கத்தினரிடம் சொல்லும்போதுதான், அவர்களும் இப்படி பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்தது.. அந்த மாதிரி அழைப்புகள் தங்களுக்கும் வந்தது என்றும், சிலர் வீட்டருகே வந்து தொந்தரவு செய்ததாகவும், அதனால் செல்போன் நம்பரை மாற்றிவிட்டதாகவும் சொல்லி உள்ளனர்.

விபச்சாரி

விபச்சாரி

யார் இந்த வேலையை பார்த்தது என தெரியவில்லை.. ஃபேஸ்புக்கில் இந்த பெண்களை விபச்சாரி என்று சொல்லி அக்கவுண்ட் ஓபன் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்... பேஸ்புக்கில் இல்லாத பெண்களும் கூட இந்த மர்ம நபர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் ஷாக்.. இப்போது லாக்டவுன் சமயத்தில், வீட்ல குழந்தைகளை வைத்து கொண்டு வேலைக்கும் போக முடியவில்லை.. என்று பெண்கள் கதறுகின்றனர்.

 விசாரணை

விசாரணை

இது சம்பந்தமாக சென்னை மேற்கு மண்டல இணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் ஆன்லைன் மூலமும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளித்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு 20 முறையாவது போன் பண்ணி கூப்பிடுகிறார்களாம்.. அசங்க அசிங்கமாக பேசுகிறார்களாம்.. இதனால் தங்களுக்கு மன வேதனையாக இருக்கிறது என்று அந்த பெண்கள் கண்ணீருடன் சொல்கிறார்கள். அந்த ஆபாச மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

English summary
chennai college girls and women compliant facebook photos
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X