சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது ஏன்?.. ஹைகோர்ட்டில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்
சென்னை: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை என சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த பதில்மனுவில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை, அறிவுரை கழகத்தின் ஆய்வுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தள்ளது. அறிவுரை கழகத்தை அணுகாமல் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரும் போது, பல தரப்பினரும் அவருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், ஆவணங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, சவுக்கு சங்கர் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் தான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மறுப்பு.. சொந்த ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பி்த்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று விட்ட அவர், மற்ற வழக்குகளிலும் ஜாமீன் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்ததாலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதைத் தடுக்கவும் தான் குண்டர் சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் வழக்கில் திருப்பம்.. தமிழக அரசுக்கு 3வது நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி கேள்வி
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவின் முழு ஆவணங்களும் தமிழிலும், ஆங்கிலத்திலும் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு காயம் ஏற்படுத்த சிறைத் துறையினருக்கு எந்த காரணமும் இல்லை எனவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications