சென்னையில் சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்தது மாநகராட்சி.. கடும் எதிர்ப்பால் பணிந்தது தவெக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்து வரி மாற்றியமைப்பை உடனடியாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே வரித்தொகை செலுத்தியவர்களுக்கு அத்தொகை அடுத்தடுத்த முன்வரியாக ஈடு செய்யப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. வரி மதிப்பீட்டை மாற்றியமைப்பது குறித்து மறுபரிசீலனை செய்யும்படி மக்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்ததையடுத்து இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டு இருந்தது. சொத்து மறுமதிப்பீட்டின் அடிப்படையில் வரி உயர்ந்தாதாக கூறப்பட்டது. சொத்து உரிமையாளர்கள் பலருக்கும் 300 சதவீதம் வரை உயர்ந்து இருந்தது கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

Chennai Corporation halts property tax hike TVK government yields to strong opposition

சொத்து வரி கடுமையாக உயர்வு

இதற்கு சென்னை மாநகராட்சி நேற்று ஒரு விளக்கம் ஒன்றை அளித்து இருந்தது. அதில் மாநக​ராட்​சி​யில், ஏற்​கனவே குறை​வாக மதிப்​பீடு செய்​யப்​பட்டு அதன் அடிப்​படை​யில் சொத்​து ​வரி செலுத்தி வருபவர்​களுக்கு உரிய தரவு​களின் அடிப்படை​யில், திருத்​திய மதிப்​பீடு செய்து அறி​விப்பு வழங்​கப்​பட்​ட​வர்​கள், அதன் மீது ஆட்​சேபனை இருப்​பின் 15 நாட்​களுக்​குள் சம்​பந்​தப்​பட்ட வட்​டார துணை ஆணை​யருக்கு மேல்​முறை​யீடு செய்ய வாய்ப்​பளித்து நடவடிக்கை எடுக்​கப்​பட்டுள்​ளது.

30 நாட்​களுக்​குள் தீர்வு காணப்​படும். எனவே மாநக​ராட்​சி​யில் சொத்து வரி உயர்த்​தப்​பட்​டுள்​ள​தாக வரும் உண்​மைக்கு மாறான செய்​தி​களை மக்​கள் நம்ப வேண்​டாம்" என்று கூறியிருந்தது. இன்று வட்டார அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் நடைபெற்று இருந்தது. இதில் சொத்து உரிமையாளர்கள் பலரும் தங்களுக்கு கடுமையாக வரி உயர்த்தப்பட்டு இருப்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு

சொத்து வரி திடீரென உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சென்னை மாநகராட்சி தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் கூறுகையில், "சென்னையில் சொத்து வரி உயர்வை உடனடியாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வரித்தொகை செலுத்தியவர்களுக்கு அத்தொகை அடுத்தடுத்த முன்வரியாக ஈடு செய்யப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி விளக்கம்

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையி, "பெருநகர சென்னை மாநகராட்சியில், குறைவான மதிப்பீடு (Under Assessed) செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்து வரி திருத்திய மதிப்பீடு தொடர்பாகப் பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகள் கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாகத் நிறுத்தி வைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மீண்டும் மாற்றப்படும்

பெருநகர சென்னை மாநகராட்சியில், குறைவான மதிப்பீடு (Under Assessed) செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்துவரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இந்த வரி மாற்றியமைப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த சில நாட்களாகப் பொதுமக்களிடமிருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டன.

இந்த திருத்திய மதிப்பீடு தொடர்பாகப் பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகள் கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாகத் நிறுத்தி வைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, வரித்தொகையானது மாற்றியமைக்கப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அளவிற்கே மீண்டும் மாற்றப்படும். மாற்றியமைக்கப்பட்ட வரித்தொகையை ஏற்கனவே செலுத்தியவர்களுக்கு, அந்தத்தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பணவரியாக ஈடு செய்யப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+