சென்னையில் வீடு கட்டுவோர், கட்டிடம் கட்டுவோருக்கு மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகரத்தை பொறுத்தவரை மிகப்பெரிய அளவில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கட்டிடங்களை கட்டி வருகின்றன. பல தனிநபர்கள் தினமும் எங்காவது வீடுகளை இடித்து புதிய வீடுகளை கட்டி வருகிறார்கள். அதேபோல் பல்வேறு நபர்கள் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்டும் பணிகளை தினமும் எங்காவது மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி பழைய கட்டிடங்கள், பழைய வீடுகளை அகற்றிவிட்டு புதிய கட்டுமானத்திற்கு தயாராகுவோருக்கு சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையை போல் தமிழ்நாட்டில் எந்த நகரத்திலும் புதிய வீடுகள் கட்டுமானங்கள் நடக்கவில்லை. அந்த அளவிற்கு ரியல் எஸ்டேட் தொழில் சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் வளர்ந்துள்ளது. சென்னை மாநகரத்திற்கு 2015 அல்லது அதற்கு முன்பு வந்தவர் இப்போது தான் வருகிறார் என்றால், நிச்சயம் வாயை பிளந்து கொண்டு தான் செல்வார்.. ஏனெனில் முன்பெல்லாம் சென்னையில் எங்கு திரும்பினாலும் தனி வீடுகள் அதிகம் பார்க்க முடியும். ஆனால் இன்று தனி வீடுகளை பார்ப்பது அரிதாகி விட்டது. எல்லாமே அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிட்டது. விவிஐபிக்கள் வாழும் இடங்களில் மட்டுமே தற்போது தனி வீடுகள் உள்ளன. மற்ற பகுதிகளில் தனி வீடுகள் எல்லாம் அடுக்குமாடி வீடுகள் மற்றும் வணிக வளாகங்களாக மாறி வருகின்றன.

அப்படி மாறுவதன் காரணமாக. பல தனிநபர்கள் தினமும் எங்காவது வீடுகளை இடித்து புதிய வீடுகளை கட்டி வருகிறார்கள். அதேபோல் பல்வேறு நபர்கள் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்டும் பணிகளை தினமும் எங்காவது மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி பழைய கட்டிடங்கள், பழைய வீடுகளை அகற்றிவிட்டு புதிய கட்டுமானத்திற்கு தயாராகுவோருக்கு மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "சென்னை மாநகராட்சி சார்பில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு அனைத்து மண்டலங்களிலும் கடந்த மே மாதம் 21-ந்தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள்படி அனைத்து கட்டுமானப் பொருட்கள், தோண்டப்பட்ட மண், கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் வளாகத்திற்குள் மட்டுமே சேமிக்கப்பட வேண்டும்.
இதை பொதுச் சாலைகள், நடைபாதைகள், சாலை ஓரங்களில் கொட்டுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 500 சதுர மீட்டர் முதல் 20 ஆயிரம் சதுர மீட்டர் வரை உள்ள கட்டிட பரப்பளவிற்கு ரூ.25 ஆயிரமும், 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட கட்டிட பரப்பளவிற்கு ரூ.5 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது.
மாநகராட்சி சார்பில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகள், வேலியிட்ட குடியிருப்பு வளாகங்கள், பெரும் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற கட்டுமானப் பணிகளில் தொடர்ச்சியாக விதிமீறல்கள் நடைபெறுவது மாநகராட்சியின் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எனவே, சென்னை மாநகராட்சி சார்பில் வருகிற 22-ந்தேதி முதல் இந்த வழிகாட்டுதல்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. இதை மீறுபவர்கள் மீது எந்தவிதமான தளர்வுமின்றி அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications