சென்னை மாமன்ற கூட்டத்தில் முதல் முறையாக ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து.. காரணம் மதிமுக கவுன்சிலர்!
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் முதல்முறையாக இன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது.
சென்னை : சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று கூடியது. முதன்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்றைய கூட்டம் தொடங்கியது.
நூற்றாண்டு கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை மாமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்குவது இதுவே முதல் முறை.
மதிமுக மாநகராட்சி கவுன்சிலர் ஜீவன் கடந்த மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அதனை ஏற்று இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கப்பட்டது.

மாமன்ற கூட்டம்
மாநகராட்சி தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்க ஒவ்வொரு மாதமும் மாமன்றக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் பிப்ரவரி மாதத்திற்கான மாமன்ற கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று கூடியது. இன்றைய கூட்டம் முதன்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. 100 ஆண்டுகள் கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை மாமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மதிமுக கவுன்சிலர்
கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மதிமுக மாமன்ற உறுப்பினர் ஜீவன், மாமன்ற கூட்டம் தொடங்கும் போது திருக்குறள் மட்டுமே வாசிக்கப்பட்டு ஆரம்பிக்கப்படுகிறது. மாமன்ற கூட்டத்தை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட மேயர் பிரியா ராஜன் அடுத்த மாதம் முதல் மாமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் என அறிவித்திருந்தார்.

வாழ்த்து + திருக்குறள்
அதன்படி இன்றைய சென்னை மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அதன் பிறகு சென்னை மேயர் பிரியா ராஜன் திருக்குறள் வாசித்தார். அதன் பிறகு அவர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழியை திருப்பிக் கூறினர். அதன் பிறகு சென்னை மாமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டது.

சிறப்புத் தீர்மானம்
இன்றைய கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் பதவி காலத்தில் இருக்கும் போது உயிரிழந்தால் ஒரு லட்சம் வழங்கப்படும் என்பதை மாற்றி சிறப்புத் தீர்மானமாக ரூ.5 லட்சமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். துணை மேயர் வைத்த கோரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.

முதல் முறையாக
முன்னதாக, கடந்த 16-ம் தேதி மறைந்த 122வது வார்டு உறுப்பினர் ஷீபா வாசுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாமன்ற உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துப் பேசினர். பின்னர் மாமன்றத்தின் இன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகிறது என்றும் மார்ச் 2ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என்றும் மேயர் பிரியா அறிவித்தார். நிறைவாக மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதமும் முதன்முறையாக பாடப்பட்டது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications