விருகம்பாக்கம் டூ ஓட்டேரி.. போரூர் டூ முட்டுக்காடு.. அவசரமாக விரைந்த ஆபிசர்ஸ்.. விறுவிறு பணிகள்.. செம
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் துரிதமாகி வரும் நிலையில், சென்னையில் புது புது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் கடந்த 25ம் தேதி முதல், கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.. செப்டம்பர் 2ம் தேதி வரை இந்த கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி நடந்து முடிந்தது..
கிட்டத்தட்ட 720 தெருக்களில் உள்ள 5,277 இயந்திர நுழைவு வாயில்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது. இயந்திர நுழைவுவாயில்களில் மொத்தம் 300 தூர்வாரும் இயந்திரங்களை கொண்டு தூர்வாரப்பட உள்ளதாக மாநகராட்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பருவமழை முன்னெச்சரிக்கை: பருவமழை முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் இறுதிவரை வழக்கமாக பெய்யும்.. இந்த பருவத்தில்தான், தமிழகத்துக்கு தேவையான மழைநீர் கிடைக்கும்.. விவசாயிகளின் வாழ்வாதாரமும் இந்த நீரை நம்பியே உள்ளன.
அதனால்தான், கால்வாய்கள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், ஏற்கனவே நடந்ததைபோல, வெள்ள பாதிப்பு மறுபடியும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. இதற்காகவே, ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு, நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளும் ஆரம்பமாகி உள்ளன.
30 சதவீத பணிகள்: இப்போதைக்கு இதில், 30 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 2 வாரத்திற்குள் மொத்த பணிகளை முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், போரூர், செங்குன்றம், மற்றும் கடலூர் பகுதிகள் உட்பட தூர்வாரும் பணி தீவிரமாகி வருகிறது.. கிட்டத்தட்ட 184.45 கிமீ தொலைவுக்கு செல்லும் கால்வாய்களில், 77 பணிகள் ஒரே நேரத்தில் நடந்து வருகிறதாம்.
ஆங்காங்கே தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்கும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் களமிறங்கி உள்ளனர்.. அடையாறு ஆற்று முகத்துவாரம், முட்டுக்காடு, புதுப்பட்டினம் கடல் முகத்துவாரங்களில் குவிந்துள்ள மணல் அகற்றப்படுகிறது. அதேபோல, விருகம்பாக்கம், அரும்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நுல்லா பகுதியில் சென்னை மாநகராட்சி உதவியுடன் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
கூவம் பகுதிகளிலும் துப்புரவு பணியை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதால், அதுகுறித்தும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
72 லாரிகள்: இந்த ஒரு வாரத்தில் மட்டும் 72 லாரிகளில் காய்கறி கழிவுகள் அகற்றப்பட்டு, கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது. அகற்றப்பட்ட செடிகள், மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும் அதேசமயம், அழிக்கப்பட்ட தாவரங்களை உரமாக மாற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications