சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை.. எப்போது தொடங்கப்படும்... மாநகராட்சி அதிகாரி விளக்கம்
சென்னை: சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் ரோப் கார் அமைப்பதற்கு கடலோர ஒழுங்குறை ஆணையம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். மெரினா கடற்கரை பகுதி என்பதால் காங்கிரீட் அடித்தளம் உள்ளிட்டவை அமைக்கப்படும். எனவே, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்பு தான் அனுமதி வழங்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னையில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலம் என்றால் அது மெரினா கடற்கரை தான். தினமும் மெரினா கடற்கரைக்கு பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மற்றும் விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரையில் கூட்டம் அலைமோதும். இந்தியாவின் மிகவும் நீளமான பீச் என்றால் அது மெரினா பீச் தான்.

மெரினா கடற்கரை என்பது வெறும் கடற்கரை மட்டுமல்ல.. அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, கருணாநிதி சமாதி ஆகியவை உள்ளன. அதேபோல் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கிறது. இது ஒருபுறம் எனில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரையில் ரோப் கார் சேவையை கொண்டுவர சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் இதற்கான ஆலோசனைகளும், ஆய்வுப் பணிகளும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், முதற்கட்டமாக உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் ரோப் கார் திட்டப் பணிகளுக்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க கடந்த 2024-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியிருந்தது. இதையடுத்து, ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. அந்த அறிக்கையை சென்னை மாநகராட்சியிடம் சமர்ப்பித்தது. இந்த ஆய்வின் போது, மெரினா கடற்கரையில் புயல்களால் ஏற்பட்ட பாதிப்பு, எத்தனை ரோப் கார்களை இயக்க முடியும்? புவியியல் தன்மை, காற்றின் வேகம், தொழில்நுட்பங்கள், நிலப்பரப்பு உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி அறிக்கை தயாரித்து வழங்கி உள்ளது.
அடுத்தகட்டமாக மத்திய அரசின் கடலோர ஒழுங்குறை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டு ஒப்புதல் பெறுவதற்கு சென்னை மாநகராட்சி காத்திருக்கிறது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் ரோப் கார் அமைப்பதற்கு கடலோர ஒழுங்குறை ஆணையம், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம்.
சென்னை மெரினா கடற்கரை பகுதி என்பதால் காங்கிரீட் அடித்தளம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.. எனவே, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்பு தான் அனுமதி வழங்கும். இதனால், அனுமதி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படலாம். ஒருவேளை விரைவில் அனுமதி கிடைத்தாலும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஜூலை மாதத்திற்கு பின்பு தான் ரோப் கார் திட்டப் பணிகளை தொடங்கும் வாய்ப்பு உள்ளது" இவ்வாறு கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications