Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2.37 லட்சம் பேருக்கு உணவு, 215 நிவாரண மையம்! மழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு அருகே சுமார் 50 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. கடந்த 12 மணி நேரமாக இது ஒரே இடத்தில் இருப்பதால் சென்னையில் மழையை கொட்டி தீர்த்திருக்கிறது. இதனால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. இந்நிலையில், மழை பாதிப்புகளை சமாளிக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "சென்னையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கி இன்று காலை 8.30 மணி வரையில் சராசரியாக 369.70 மி.மீ அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சராசரியாக 100.79 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Chennai Corporation Cyclone Ditwah Weather Chennai Tamil Nadu

குறிப்பாக எண்ணூர் பகுதியில் 188.70 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இது கடந்த அக்டோபர் மாதம் முதல் இன்று வரை சென்னையில் பதிவான மழை அளவில் அதிகபட்சமாகும். குறைந்தபட்சமாக மடிப்பாக்கம் பகுதியில் 26.10 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

என்னென்ன நடவடிக்கைகள்?

மழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவுகளை வழங்க 116 சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. அக்.22ம் தேதி முதல் நவ.30ம் தேதி வரை மொத்தம் 5,98,200 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் சுமார் 32,500 நபர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டு இருக்கிறது.

உணவு விநியோகம்

இன்று 83,600 நபர்களுக்கு மதிய உணவும், 1,54,000 நபர்களுக்கு இரவு உணவும் என, 2.37 லட்சம் நபர்களுக்கு இன்று ஒரே நாளில் உணவு விநியோகிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், அக்.17ம் தேதி முதல் நேற்று வரை 2,800 நிலையான மற்றும் நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்து முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,16,764 நபர்கள் பயனடைந்துள்ளனர். அதேபோல தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக, 117 படகுகள் தயார் நிலையில் உள்ளன. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமானதாகும்.

பேரிடர் மீட்பு படையினர்

மழை பாதிப்புகளை எதிர்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 300 நபர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 50 நபர்கள் தயாராக உள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழை நீரை வெளியேற்றும் வகையில் 170 மோட்டார் பம்புகள், 550 டிராக்டர்களின் பொருத்தப்பட்ட பம்புகள் என மொத்தம் 1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எக்ஸ்கவேட்டர்கள் பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோட்டிக் எக்ஸ்கவேட்டர்கள், 3 மினி ஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர வாகனங்கள், 15 மரக்கிளைகளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், உட்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. மழையால் விழும் மரங்களை அகற்றுவதற்காக, ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2, கையடக்க மர அறுவை அறுப்பான்கள் 224, டெலஸ்கோப்பிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இதனை கொண்டு நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை மழையின் காரணமாக விழுந்த 20 மரங்களும் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன.

சுரங்க பாதையில் மழைநீர்

சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது. மழைநீர் வடிகால்கள் கால்வாய்கள் வண்டல் மண் சேகரிப்பு தொட்டியில் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 15 இணைப்புகளும் கூடிய 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மொத்தம் 22,000 நபர்கள்

பருவ மழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 22,000 நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். புயல் மற்றும் மழையின் போது முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் ஆவின் பால் பவுடர், 1 லட்சம் பாக்கெட்டுகளும், 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் பாமாயில் அடங்கிய தொகுப்பு 1 லட்சம் எண்ணிக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர்

சென்னை குடிநீர் வாரியத்தை பொறுத்தவரையில் 299 தூதுவாரம் இயந்திரங்கள், 77 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 151 ஜெட்ராடு வாகனங்கள், 45 ஜெட் உறிஞ்சும் இயந்திரங்கள், 3 கழிவுநீர் உறுதிகள், 3 கழிவுநீர் அகற்றும் ரோபோ இயந்திரங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள 100 கழிவுநீர் ஊர்திகள் என மொத்தம் 74 கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ள.

15 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2,149 களப்பணியாளர்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொள்ள ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 111 சமையல் கூடங்கள் மற்றும் 215 வெள்ள நிவாரண மையங்களுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+