வெள்ள மீட்பு பணிகளுக்காக சென்னை மாநகராட்சிக்கு ரூ.968 கோடி நிதி தேவை.. அரசிடம் அறிக்கை தாக்கல்!
சென்னை: வெள்ள மீட்புப் பணிகள் மற்றும் சேத பாதிப்புகளுக்கு ரூ.968.39 கோடி நிதி தேவை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.401.53 கோடி நிதி ஒதுக்குமாறு அரசுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களும் மிக்ஜாம் புயல் மற்றும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் 193 இடங்களில், முதல் மாடி அளவுக்கு மழைநீர் தேக்கம் ஏற்பட்டது. பல பகுதிகளில், தேங்கிய மழைநீர் வடிய ஐந்து நாட்கள் வரை ஆனது. மழைநீர் தேங்கிய பகுதிகளில், நீரை வடிய வைக்கவும், அங்கு மின்பழுதை சரி செய்து, உடனடி மின்சாரம் வழங்கும் பணிகள், குடிநீர் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

இதற்காக, மாநகராட்சியின் 23,000 பணியாளர்கள், 18,000 போலீசார், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட பணியாளர்கள் என 50,000க்கும் மேற்பட்டோர் சென்னை மாநகராட்சியில் வெள்ளம் மற்றும் புயல் பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் தங்குவதற்கான வசதியை மாநகராட்சி ஏற்படுத்தி தந்தது. அத்துடன், படகுகள் வாயிலாக மக்களை மீட்டது, அவர்களுக்கான உணவு பொருட்கள் வழங்கியது.
அந்த வகையில், வெள்ள மீட்பு பணிகள் மற்றும் சேத பாதிப்புகளுக்கு ரூபாய் 968.39 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சாலை, வாகன சேதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மாநகராட்சிக்கு முதற்கட்டமாக 401.53 கோடி ரூபாய், அடுத்தகட்டமாக 566.86 கோடி ரூபாய் என மொத்தமாக 968.39 கோடி ரூபாய் ஒதுக்கும்படி மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தமிழக அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளார்.
குறிப்பாக, வெள்ள பாதிப்பில் மாநகராட்சி பேருந்து தட சாலைகள் 300 கி.மீ., நீளத்துக்கு சேதமடைந்துள்ளது. அச்சாலையை தற்காலிகமாக சீரமைக்க 3 கோடி ரூபாய், உட்புற சாலைகள் 3,200 கி.மீ., நீளத்துக்கு 32 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டுள்ளது. மேலும், 100 கி.மீ., பேருந்து தட சாலைகள் நிரந்தரமாக சீரமைக்க 69.58 கோடி ரூபாய், 350 கி.மீ., உட்புற சாலைகளுக்கு 110 கோடி ரூபாய் என பல்வேறு பணிகளுக்காக மாநகராட்சி சார்பில் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications