சென்னையில் மட்டும் 1.80 லட்சம் தெருநாய்கள்.. மைக்ரோசிப் மூலம் கண்காணிப்பை தொடங்கும் மாநகராட்சி
சென்னை: கொரோனா பரவலுக்கு பின்பாக தமிழ்நாடு முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் சென்னையில் தெருநாய்கள் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்திருப்பது, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தெருவில் நடந்து செல்வோர், சிறுவர்கள், குழந்தைகள் என்று பாரபட்சம் காட்டாமல் தெருநாய்கள் கடித்து வருகின்றன.
அண்மையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை வளர்ப்பு நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தெருநாய்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்தன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள்
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தரப்பில், தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் வெறிநாய்க்கடி நோய் பரவுவதை தடுக்கும் வகையில் திருவிக நகர் மண்டலம் - புளியந்தோப்பு, தேனாம்பேட்டை மண்டலம் - லாயிட்ஸ் காலனி, கோடம்பாக்கம் மண்டலம் - கண்ணம்மாபேட்டை, சோழிங்கநல்லூர் மண்டலம் - சோழிங்கநல்லூர், ஆலந்தூர் மண்டலம், - மீனம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
கருத்தடை அறுவை சிகிச்சை
அதேபோல் புளியந்தோப்பு, திருவிக நகர், நுங்கம்பாக்கம், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தலா 30 நாட்களுக்கும், மீனம்பாக்கம் மையத்தில் நாளொன்றுக்கு 15 தெருநாய்களுக்கும், சோழிங்கநல்லூர் மையத்தில் 10 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பணியாளர்கள்
தெருநாய்களை பிடிக்கும் பணிகளுக்கான 16 நாய்கள் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் நாய்களை பிடிக்கும் வலைகளுடன் சராசரியாக 5 நாய் பிடிக்கும் பணியாளர்கள் என 78 பணியாளர்கள், கருத்தடை அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொள்ள 23 கால்நடை உதவி மருத்துவர்கள், கருத்தடை அறுவை சிகிச்சையின் தரப்பினை உறுதி செய்வதற்காக 4 கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
1.80 லட்சம் தெருநாய்கள்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணியில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 157 தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 66,285 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும், 66,285 தெருநாய்கள் மற்றும் 41,917 செல்லப்பிராணிகள் என மொத்தம் 1,08,202 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
மைக்ரோசிப் பணிகள்
தெருநாய்களைப் பிடித்தல், கருத்தடை செய்தல், வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மீண்டும் விடுவித்தல் ஆகியவற்றை முறையாக கண்காணிப்பதற்காக ஒவ்வொரு நாய்க்கும் மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி முன்னோட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மாநகராட்சியில் உள்ள 1.80 லட்சம் தெருநாய்களுக்கும் ரூ.3 கோடி செலவில் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்துதல் பணி ஜுன் மாதம் முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications