சென்னையில் வீடு தேடி வரும் ரூ.5000 அபராதம்.. இன்றே கடைசி நாள்.. பொதுமக்களே உடனே லைசென்ஸ் வாங்குங்க
சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் நாய் - பூனைகளை வீட்டில் வளர்த்தால் அதற்கான உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தை பெற இன்று கடைசி நாளாகும். இல்லாவிட்டால் நாளை முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த நேரிடும்.
நம் நாட்டில் தெருநாய்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் நடந்து செல்வோரை தெருநாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றன. சமீபத்தில் கூட தெருநாய்கள் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு பெரும் கவனம் பெற்றது.

மக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி வளாகத்தின் அருகே சுற்றி திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும். தெருநாய்கள் நுழையாத வகையில் தடுப்பு வேலி அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இதற்கிடையே தான் சமீபத்தில் சென்னை மாநகராட்சியில் நேற்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் நடந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்பது தான் அந்த தீர்மானம்.
மேலும் இது நடைமுறைக்கும் வந்துள்ளது. நவம்பர் 24ம் தேதிக்குள் நாய், பூனை வளர்ப்பதற்கு லைசென்ஸ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தேதி தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் இன்று லைசென்ஸ் பெற கடைசி நாள். வீட்டில் நாய், பூனை வளர்ப்போர் இன்றைக்குள் லைசென்ஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் நாளையில் இருந்து ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த நேரிடும்.
அதாவது அதிகாரிகள் வீடு வீடாக சோதனை செய்து லைசென்ஸ் பெறாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க உள்ளனர். கடைசி நாளான இன்று சென்னையில் லைசென்ஸ் பெற தனி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களில் பூனை, நாய்களுக்கான லைசென்ஸ், மைக்ரோசிப்பிங் மற்றும் தடுப்பூசியை பெற முடியும். அதன்படி மணலி தேவராஜன் தெருவில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால், சுராபேட்டை சண்முக புரத்தில் உள்ள கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால், பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி நகரில் உள்ள கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால் உள்ளிட்ட இடங்களில் இன்று முகாம் நடைபெற உள்ளது.
அதேபோல் அம்பத்தூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் அமைந்துள்ள காமராஜர்புரம் தன்லப் மைதானம், கீழ்பாக்கம் கும்மாளம்மன் கோவில் தெருவில் உள்ள கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால், ஆலப்பாக்கம், மாந்ததோப்பில் உள்ள கவுன்சிலர் அலுவலகம், வேளச்சேரி (மேற்கு) வார்டு 175 ல் 22வது கிராஸ் தெருவில் உள்ள அம்பேத்கர் நகர் கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால், மடிப்பாக்கம் மைலை பாலாஜி நகரில் உள்ள கார்ப்பரேஷன் கம்யூனிட்டி ஹால் உள்ளிட்டவற்றில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகராட்சி சார்பில் முகாம் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications