அதிமுக பொது செயலாளர் யார்? ஏப்.11 இல் கிளைமாக்ஸ்! சசிகலாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் 11 ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கோப்புகளை சசிகலாவிடம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர்.
இதையடுத்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்க காத்திருந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அப்போது தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார்.

அதிமுக பொதுக் குழு கூட்டம்
அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக் குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2016ஆம் ஆண்டு
இதையடுத்து 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என அறிவிக்கக் கோரியும், பொதுச் செயலாளர் இல்லாமல் பொதுக் குழு கூட்டத்தை கூட்டி என்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கூறியும் 2016 ஆம் ஆண்டு தன்னை பொதுச் செயலாளராக அறிவித்த தீர்மானம் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமியை கட்டுப்படுத்தும் என அறிவிக்கக் கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

சட்டவிரோதம்
அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் சட்ட விரோதம் என உத்தரவிடக் கோரியும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த நிலையில் சசிகலா வழக்கை நிராகரிக்குமாறு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி மனுத் தாக்கல் செய்துள்ளார்கள்.

தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்த வழக்கு விசாரணையின் போது பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோர வாய்ப்பு இல்லை, கட்சியும் சின்னமும் தங்களிடம் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாகவும் கூறியிருந்தனர். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் அரசியல் களம் சூடுபிடிக்கும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதி ஸ்ரீதேவி தவிர்க்க இயலாத காரணத்தால் விடுமுறை என்பதால் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications