தலைக்கேறிய கோபம்.. பொண்டாட்டி போயிட்டாளே.. கதறிய கணவன்.. சென்னையில் திணற வைத்த ஷாக் சம்பவம்!
சென்னை: சென்னையில் ஆர். கே நகர் பகுதியில் நடந்த பெண்ணின் மரணம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆர்.கே நகர் பகுதிக்கு அருகே தொண்டையர் பேட்டையில் வசித்து வருகிறார் நந்தகுமார். 33 வயதாகும் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
பபிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு இவர் வாழ்ந்து வந்தார். தொடக்கத்தில் இவர்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்தாலும் போக போக இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

சண்டை
நந்தகுமாருக்கும் பபிதாவிற்கு நிறைய வயது வித்தியாசம் உள்ளது. பபிதா வெறும் 22 வயது மட்டுமே நிரம்பியவர். இவர்கள் இருவருக்கும் 11 வருடம் வித்தியாசம் என்பதால் அதுவே சண்டைக்கும் காரணமாக மாறி உள்ளது. அடிக்கடி இவர்களுக்குள் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இந்த கருத்து வேறுபாடு முற்றி அவ்வப்போது அது அடிதடி சண்டையாக மாறி உள்ளது.

திருமணம்
மனைவியை போட்டு அடிப்பது, சாப்பாட்டை வீசி எறிவது, வீட்டு ரிமோட்டை வீசி எறிவது என்று மிக கொடூரமாக நந்தகுமார் நடக்க தொடங்கி உள்ளார். இந்த சண்டை முற்றுவே நந்தகுமார் குடி பழக்கத்திற்கும் அடிமை ஆகி உள்ளது. வாரத்திற்கு இரண்டு நாள் குடித்தவர் பின்னர் தினமும் குடிக்க தொடங்கி உள்ளார். அதன்பின் சம்பள பணத்தை கொடுக்காமல் மொத்தமாக எல்லா பணத்திற்கும் குடிக்க தொடங்கி உள்ளார். இதனால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் பபிதா கஷ்டப்பட தொடங்கி உள்ளார்.

குடி பழக்கம்
வீட்டு வாடகைக்கு காசு இல்லை.. மளிகை சாமான் வாங்க காசு இல்லை.. என்ன செய்யுறீங்க.. குடிக்கிறதை குறைச்சுக்கோங்க என்று பபிதா சொல்லும் போதும் கூட அதை கேட்காமல் நந்தகுமார் தினமும் குடித்தபடி வீட்டிற்கு வந்துள்ளார். சமயங்களில் இவர் குடித்துவிட்டு டாஸ்மாக்கிலேயே படுத்து கிடைக்கும் சம்பவங்களும் கூட நடந்து உள்ளன. சில சமயங்களில் போலீசார் இவரை சந்தேக கேசில் பிடித்துக்கொண்டு சென்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த நிலையில் நந்தகுமார் இதேபோல் குடித்துவிட்டு ஜனவரி 1ம் தேதி அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார்.

மரணம்
புத்தாண்டும் அதுவுமாக இப்படி குடித்துவிட்டு வந்து இருக்கிறாயே என்று பபிதா கேள்வி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை முற்றவே பபிதாவை நந்தகுமார் மோசமாக தாக்கி உள்ளார். அதன்பின் கோபத்தில் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் புடவையை பேனில் கட்டி, தூக்கு மாட்டிக்கொண்டது போல நாடகம் நடத்தி உள்ளார். அதிகாலை விடிந்ததும் ஐயோ என்று கத்தி ஊரை கூட்டி உள்ளார். எல்லோருக்கும் முன் என் பொண்டாட்டி போயிட்டாளே என்று நாடகம் ஆடி உள்ளார்.

கொலை
பின்னர் போலீசுக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பினர். இதன் முடிவு நேற்று வந்தது. அதில், கழுத்து நெருக்கப்பட்டதால் மரணம் நிகழ்ந்து இருப்பதால் இது தூக்கு மூலம் ஏற்பட்ட தற்கொலையாக இருக்கலாம். ஆனாலும் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளதால் சந்தேகமாக உள்ளது என்று ரிப்போர்ட் வழங்கி உள்ளனர். இதையடுத்து நந்தகுமாரை போலீசார் தீவிரமாக விசாரித்ததில் , அவர்தான் மனைவியை கொலை செய்தார் என்பதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆர்.கே நகர் போலீசார் அவரை கைது செய்து ரிமாண்ட் செய்தனர்.












Click it and Unblock the Notifications