சென்னை தாம்பரம் அருகே வாலிபர் தலை துண்டித்து கொலை.. வீட்டின் முன் தலையை வீசிய கும்பல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தாம்பரம் அருகே வாலிபரின் தலையினை துண்டித்து கொலை செய்து விட்டு வீட்டின் முன்பு மர்ம நபர்கள் வாசலில் வீசி சென்ற சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீதமுள்ள உடலை போலீசார் தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக கொலை செய்யபட்டாரா என்று விசாரனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை தாம்பரம் அடுத்த சோமமங்கலம் எருமையூர் அருகே இரவு அப்பகுதியில் உள்ள வீட்டு வாசலின் முன்பு வாலிபர் ஒருவரின் தலை மட்டும் துண்டிக்கபட்டு வீசபட்டு கிடந்தது.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் சோமங்கலம் காவல் நிலையதிற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துண்டிக்கப்பட்ட தலையினை கைப்பற்றி மேற்கொண்டு முதற்கட்ட விசாரணையை நடத்தினர்.

குற்றவாளி

குற்றவாளி

அப்போது அதே பகுதி கிறிஸ்துராஜா கோவில் தெருவை சேர்ந்த சச்சின் என்பது தெரியவந்தது. இவர் கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துவ ஆலயத்திற்க்கு முன்பு வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யபட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

உடல் எங்கே

உடல் எங்கே

முன் விரோதம் காரணமாக கொலை செய்யபட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் மீதமுள்ள தலையில்லா உடலை மர்ம நபர்கள் எங்கு வீசி சென்றனர் என்று போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஏரளாமான போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர.

கொடுங்கையூர்

கொடுங்கையூர்

சென்னை கொடுங்கையூரில் பெண் இடுப்பை பிடித்து கிள்ளி பாலியியல் சீண்டலில ஈடுபட்ட சிற்றுண்டி கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் தனது சகோதரர் வீட்டிற்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு திரும்பும் போது தனது மகள் இருசக்கர வாகனத்தை ஓட்ட அவர் பின்னால் அமர்ந்து வந்துள்ளர்.

கைது

கைது

அப்பொழுது ஆர்.வி நகர் பகுதியில் போதையில் வந்த ஆசாமி ஒருவர் அந்த பெண்ணின் இடுப்பை பிடித்து கிள்ளி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்பபடுகிறது. இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜவகர் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது ஆர்வி நகர் பகுதியில் சாலையோர சிற்றுண்டி கடை நடத்தி வந்த மோகன் பாபு வயது 40 என்ற நபர் தான் இந்த குற்றத்தை செய்தார் என தெரிய வந்தது. அவர் கொடுங்கையூர் கட்டபொம்மன் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது 354a, 354c, 509, 294b & 4 of TNPHW Act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+