மருத்துவருக்கு கத்திகுத்து! கத்தியில் இருந்த மார்க்! மர்ம இளைஞர் விக்னேஷை தூக்கிய போலீஸ்! பின்னணி
சென்னை: , 9நாடு முழுவதும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. தாக்குதலை அரசு தடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த செந்தில் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். அவர் பெயர் விக்னேஷ். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கத்தியில் மார்க்: போலீசார் கைப்பற்றிய கத்தி.. காய்கறி கட் செய்ய பயன்படுத்தப்படும் கத்தி ஆகும். இதில் தீயில் வாட்டிய மார்க் இருந்துள்ளது. இதனால் இதை தீயில் வாட்டி அதை சூடு படுத்தி இருக்கலாம்.. அதன் பின் அதை கூர்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஸ்டாலின் அறிக்கை: இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.
ஆய்வு: சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவருக்கு கத்திக்குத்து.. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்துள்ளார்.
வார்னிங்; நாடு முழுவதும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. தாக்குதலை அரசு தடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த செந்தில் பேட்டி அளித்துள்ளார்.
கண்டனம்: சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவருக்கு கத்திக்குத்து விவகாரத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, விக்னேஷ் என்பரால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். தமது தாய்க்கு சரியான மருத்துவம் அளிக்கவில்லை என்று கூறி இந்தத் தாக்குதலை விக்னேஷ் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
உலகில் உழவர்களுக்கு அடுத்தபடியாக உயிர்காக்கும் கடவுள்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள் மருத்துவர்கள். அவர்கள் மருத்துவம் அளிப்பதில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது அப்பாவி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அப்பாவி பொதுமக்களில் தொடங்கி மருத்துவர்கள் வரை யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. இத்தகைய கொடுமைகள் ஒருபுறம் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து வருவது குரூரமான நகைச்சுவை ஆகும்.
கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும், என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications