ஈசிஆர் ரோட்டில் யாருங்க இது? உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல்.. கொதித்த பெண்கள்.. அடுத்து நடந்த கொடுமை
சென்னை: பெண்கள் முன் அருவருக்கத்தக்கச் செயல்களில் ஈடுபட்டதைத் தட்டி கேட்ட இளைஞரின் கன்னத்தில் கஞ்சா ஆசாமி கத்தியால் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள கோவளம் பகுதியை சேர்ந்தவர் வீரா என்கிற வீரமுத்து... இவர் எந்நேரமும் மது போதையிலேயே இருப்பாராம்.. முக்கிய கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்கிறார்கள்..

கஞ்சா போதையில் இருக்கும் வீரா, எப்போதுமே அங்குள்ள மக்களிடம் எல்லை மீறி நடந்து கொள்வாராம்.. கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவாராம்..
தகாத வார்த்தைகள்: ஏதாவது ஒரு தெருவில் தள்ளாடியபடியே நடந்து கொண்டிருப்பாராம்.. வழியெல்லாம் தகாத வார்த்தைகளால் யாரையாவது பேசிக்கொண்டே போவாராம்.. இதனால், வீரமுத்துவை பார்த்தாலே, அந்த பகுதி மக்கள் தலையிலடித்து கொள்வார்களாம்..
இப்படித்தான் சம்பவத்தன்று, தன்னுடைய வீட்டுக்கு வெளியே நின்றிருந்தார்.. அப்போது இவரது எதிர் வீட்டு பெண்கள் முன்பு திடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றாராம்.. பிறகு டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டாராம்.. தொடர்ந்து அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.. இதைப்பார்த்து கொந்தளித்து போன பாபு என்ற இளைஞர், வீரமுத்துவை தட்டிக்கேட்டுள்ளார்.. ஆனால், வீரமுத்து, பாபுவையும் மோசமாக பேசியிருக்கிறார்.
கோபம்: அதுமட்டுமல்ல, கூலிங் க்ளாஸ் மாட்டிக் கொண்டு, சிகரெட் பற்ற வைத்து வாயில் வைத்துக்கொண்டே, இளைஞரை மிரட்டினாராம் வீரமுத்து. இதைப்பார்த்ததும் பாபுக்கு இன்னும் கோபம் அதிகரித்துள்ளது.. வீரமுத்துவின் வீட்டு கேட்டில் ஏறி, அவரை எச்சரிக்க முயன்றுள்ளார்.. அப்போது, வீரமுத்து, தன்னுடைய கையில் வைத்திருந்த கத்தியால், பாபுவின் கன்னத்தில் கொடூரமாக கிழித்துள்ளார். இதில் பாபுவின் கன்னத்திலிருந்து ரத்தம் கொட்டியிருக்கிறது..
இதைப்பார்த்து அலறி துடித்த பெண்கள், பாபுவை அங்கிருந்து மீட்டு அழைத்து சென்றனர்.. ஆனால், தகவலறிந்த வந்த போலீசார் வீரமுத்துவை கைது செய்யவே இல்லையாம்.. அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு கிளம்பிவிட்டார்களாம்.
வருத்தம்: ஏற்கனவே வீரமுத்து மீது நிறைய புகார்கள் இருப்பதாகவும், அதனால்தான் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் பொதுமக்கள் வருத்தமாக சொல்கிறார்கள்.. கஞ்சா போதையில், இளைஞரின் கன்னத்தில் கத்தியால் கிழித்த இந்த சம்பவம் கோவளம் பகுதியில் மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications