சென்னை ஈசிஆரில் சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு.. இன்று நள்ளிரவு முதல் அமல்.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை - மாமல்லபுரம் இடையேயான சாலையின் சுங்கக்கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக உயர்கிறது.
இந்தியாவில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு வேகமாக செல்லும் வகையில் பல்வேறு பெயர்களில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலைகள் மக்களுக்கு பெரிதும் பயனளித்து வருகிறது.

இந்நிலையில் தான் நெடுஞ்சாலைகளை பராமரிப்புக்கான செலவுக்காக வாகன ஓட்டிகளிடம் இருந்து டோல் கட்டணம் எனும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சுங்கக்கட்டணம் என்பது ஒவ்வொரு ஆண்டும் திருத்தியமைக்கப்பட்டு குறிப்பிட்ட தொகை உயர்த்தப்படுகிறது.
அந்த வகையில் தற்போது சென்னை ஈசிஆரில் அக்கரை- மாமல்லபுரம் இடையேயான சாலையை பயன்படுத்துவதற்கான சுங்கக்கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட உள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் ஒன்று ஈசிஆர் எனும் கிழக்கு கடற்கரை சாலை. இந்த சாலையில் சென்னை அக்கரை - மாமல்லபுரம் இடையே 30 கிலோமீட்டர் தொலைவுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இந்த சுங்கக்கட்டணம் என்பது திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டணம் என்பது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி கார், ஜீப், மூன்று சக்கர வாகனங்களுக்கு ஒரு ரூபாய் முதல் ரூ.68 வரை சுங்கக்கட்டணம் உயர்கிறது. இலகு ரக வணிக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு ரூ.2 முதல் 110 வரை சுங்கக்கட்டணம் உயர்கிறது. இந்த அதிகரிக்கப்பட்ட சுங்கக்கட்டணம் என்பது அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
டோல் கட்டணத்தைத் தவிர்க்க.. இதை மட்டும் பண்ணாதீங்க.. மத்திய அரசின் வார்னிங்.. கவனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications