ரயிலில் தொங்கிய சென்னை மாணவன்.. "செத்துட்டான்டா".. பதறடித்த வீடியோ.. ஐசியூவில் சொன்ன அந்த வார்த்தை
சென்னை: மின்சார ரயிலில் கல்லூரி மாணவன் தொங்கிக்கொண்டே சாகசம் செய்த வீடியோ, இணையத்தில் வேகமாக பரவி, காண்போரை பதற வைத்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையை சென்னை போலீசார் நடத்தி வருகிறார்கள்.. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் டாக்டர்களிடம் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?
சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ்.. 16 வயதுதான் ஆகிறது.. இவர் பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார்... கடந்த 9-ம் தேதி மதியம் காலேஜ் முடித்துவிட்டு, தன்னுடைய நண்பர்களுடன் மின்சார ரயிலில் சென்றுள்ளார்.

ராயபுரம்: மதியம் 12.20 மணியளவில், ராயபுரத்திற்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையே ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, ரயிலில் தொங்கியபடி வித்தை காட்டி கொண்டிருந்தார் அபிலாஷ்.. ரயிலின் படியில் நின்று கொண்டு, கம்பியை பிடித்துக்கொண்டு டான்ஸ் ஆடினார்.. ரயிலில் தொங்கியபடி ஆட்டமும் போட்டுள்ளார்... உடல் முழுவதையும் வெளியே நீட்டுவதும், பின் உள்ளே இழுப்பதுமாகவும் இருந்துள்ளார்.
இப்படி ஒரு சாகசம் செய்து, அதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிடலாம் என்று நினைத்துள்ளார் அபிலாஷ்.. இன்னொரு நண்பர், அபிலாஷை ரீல்ஸ் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.
மின்கம்பம்: அப்போது அபிலாஷ், 'மச்சான் இங்க பாரு' என்று சொல்லிக்கொண்டே டான்ஸ் ஆடும்போது, எதிர்திசையை பார்க்காமல், பின்பக்கமாக பார்த்து ஆடி கொண்டிருந்தார்.. அப்போது தன்னுடைய முதுகு பக்கத்தை சற்று வளைந்து காட்டியபோது, திடீரென மின் கம்பத்தில் மோதி துாக்கி வீசப்பட்டார். ஒரே செகண்டில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது..
இதைப்பார்த்து பதறிய நண்பர்கள், "மச்சான் செத்துட்டான்டா" என்று அலறி கத்தினார்கள்.. உடனே ரயில் நின்றதுமே, கீழே இறங்கி, அபிலாஷ் விழுந்த கிடந்த இடத்தை நோக்கி ஓடினார்கள்.. அங்கே மின்கம்பத்தில் மோதி, ரத்த வெள்ளத்தில் அபிலாஷ் சுய நினைவின்றி விழுந்து கிடந்துள்ளார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அபிலாஷை, உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தூக்கி சென்று அனுமதித்தனர்..
தீவிர சிகிச்சை: அங்கு ஐசியூவில் அபிலாஷூக்கு சிகிச்சை ஆரம்பமானது.. தற்போது அவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தெரிகிறது.. தொடர்ந்து தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.. தற்போது, அபிலாஷ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அப்போது டாக்டர்களிடம், "டாக்டர், தெரியாம தப்பு செஞ்சுட்டேன்" என்று கதறி அழுதுள்ளார்..
இந்த விபத்து குறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.. எனினும், ரயிலில் சாகசத்தில் ஈடுபட்டு, கரண்ட் கம்பத்தில் மோதுவதும், நண்பர்கள் அச்சத்தில் கத்தியதும், வீடியோவாக வலம்வந்து பதறடித்து கொண்டிருக்கிறது..!!
மாணவர் தற்போது உயிர் பிழைத்தாலும், இதுபோன்ற செயல்களை மன்னிக்கவே முடிவதில்லை.. ஆபத்தான வீடியோக்களை எடுப்பதால், எத்தனையோ உயிர்கள் காவு வாங்கப்பட்டாலும், ரீல்ஸ் மோகம் இன்னும் குறைந்தபாடில்லை.
கோரிக்கை: கடந்த வாரம் சென்னையில் இதுபோலவே ஒரு சம்பவம் நடந்தது.. சென்னை அம்பத்தூர் அரசு தொழிற் பயிற்சி மைய மாணவர்கள், பட்டா கத்தியுடன் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டிருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. அரசு கலைக்கல்லூரி மாணவர்களைத் தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி மைய மாணவர்களும் பட்டா கத்தியுடன் ரீல்ஸ் செய்திருந்தது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இது போன்று, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குற்ற சம்பங்களில் ஈடுபட தூண்டும் விதமாக ரீல்ஸ் வெளியிடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கையும் விடுத்து வருகிறார்கள். எனவே, நம்முடைய காவல்துறை இதுபோன்ற ஆபத்தான செயல்பாடுகளுக்கு, ஒரு கடிவாளத்தை போட்டால் நல்லா இருக்கும்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications