2024ல்.. ஆரம்பமே அடிச்சு ஆடும் மெட்ரோ நிர்வாகம்.. மின்சார ரயிலை கையகப்படுத்த முடிவு.. செம பிளான்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்நிறுவனம் இன்னும் சில மாதங்கள் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டத்தை (எம்ஆர்டிஎஸ்) கையகப்படுத்தும். அதாவது பறக்கும் ரயில் நிலையத்தை கையகப்படுத்தும். முதல் நடவடிக்கையாக, பறக்கும் ரயில் நிலையங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மல்டி மாடல் ஹப்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதால், 2025 ஆம் ஆண்டில் கட்டம்-2 மெட்ரோ ரயில்கள் இயங்கத் தொடங்கும் போது பயணிகள் மிக எளிதாக பயணம் செய்ய முடியும்.பயணிகள் மெட்ரோ ரயில்களில் இருந்து MTC பேருந்துகள், புறநகர் மற்றும் MRTS ரயில்கள் அல்லது மெட்ரோ ரயில் கட்டம்-1 வழித்தடங்களுக்கு தடையின்றி நொடிகளில் மாறலாம் . 23 இடங்களில் இந்த வசதி வர உள்ளது.

மல்டி மாடல் திட்டங்கள்: சர்வதேச நாடுகளில் மட்டும் உள்ள இந்த வசதி சென்னையில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த மையங்கள் 116.1 கிமீ கட்டம்-2 நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் 2025 முதல் 2028 வரை இந்த மெட்ரோ பணிகள் நடக்கும்.
திருவான்மியூர் மற்றும் திருமயிலையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் எம்ஆர்டிஎஸ் நிலையங்களுடனும், மந்தவெளி மற்றும் மாதவரத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்களுடனும் இணைக்கப்படும். மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கிமீ மெட்ரோவில் இது போல ஒன்பது மையங்கள் அமைக்கப்படும்.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26.1 கிமீ மெட்ரோ-4ல், கோடம்பாக்கம், ஐயப்பன்தாங்கல், பூந்தமல்லி பேருந்து நிலையம், நந்தனம் மற்றும் வடபழனி ஆகிய ஐந்து மையங்கள் அமைக்கப்படும். 44.6 கிமீ மெட்ரோ-5ல், மாதவரம் பேருந்து நிலையம், வில்லிவாக்கம் பேருந்து நிலையம், அண்ணாநகர், கோயம்பேடு, ஆலந்தூர், செயின்ட் தோ வில்லிவாக்கம் வாணுவம்பேட்டை, கீழ்கட்டளை ஆகிய இடங்களில் ஒன்பது மையங்கள் அமைக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில்நிறுவனம் இன்னும் சில மாதங்கள் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டத்தை (எம்ஆர்டிஎஸ்) கையகப்படுத்தும். அதாவது பறக்கும் ரயில் நிலையத்தை கையகப்படுத்தும். முதல் நடவடிக்கையாக, பறக்கும் ரயில் நிலையங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரிகளின் கூற்றுப்படி, எம்ஆர்டிஎஸ் நிலையங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் என்னென்ன வசதிகளைச் சேர்க்க வேண்டும் என்பதை அறியும் முயற்சியில் அவர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். அனுமதி கிடைத்ததும், ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
திருமயிலை மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய இரண்டு நிலையங்களை ஆய்வு செய்தோம், மேலும் அந்த நிலையங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து மதிப்பீட்டை வழங்கும் நிறுவனத்தை நியமிக்க திட்டமிட்டுள்ளோம். நாங்கள் தனியார் ஏஜென்சிக்கு வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகு, ஒவ்வொரு நிலையத்தையும் எவ்வாறு சிறப்பாக உருவாக்குவது என்பதை அவர்கள் வரைவார்கள். விளக்குகள் முதல் பாதுகாப்பு வரை பயணிகள் வசதிகள் வரை அனைத்தும் மாறும். இந்த நிலையங்களை சிஎம்ஆர்எல் தரநிலைக்கு கொண்டு வருவதே யோசனை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரயில் சேவையை மெட்ரோ நிர்வாகம் கையகப்படுத்தல் நீண்ட செயல்முறையாக இருக்கும், ஆரம்பத்தில், ரயில்வே தொடர்ந்து ஒரு வருடத்திற்கு ரயில்களை இயக்கும் . ஏனென்றால், சிஎம்ஆர்எல் இதை கையகப்படுத்திய பிறகு, நிலையத்தை மேம்படுத்தும் பணியே குறைந்தது ஒரு வருடமாவது நடக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications