இனி ஸ்மூத்தா போகலாம்.. சென்னை சாலைகள் அடியோடு மாறுது.. அரசு எடுத்த ஸ்மார்ட் முடிவு.. நல்ல செய்தி!
சென்னை: அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளின் நிலை குறித்தும், சாலை வெட்டுக்களை சீரமைக்கும் பணிகள் குறித்தும், மழைநீர் வடிகால் பணிகள் பொருட்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, கூடுதல் தலைமைச் செயலாளர் / மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துறை, முதன்மைச் செயலாளர், உள்துறை, முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, முதன்மைச் செயலாளர், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு காவல்துறை இயக்குநர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர், முதன்மைச் செயலாளர், சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட், மேலாண்மை இயக்குநர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், உறுப்பினர் செயலாளர், பெருநகர வளர்ச்சிக் குழுமம், இயக்குநர், பேரிடர் மேலாண்மை, பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் (பணிகள்). கூடுதல் மாநகர காவல் ஆணையர் (போக்குவரத்து), மற்றும் வட்டார துணை ஆணையர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய முடிவுகள்: இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் மற்றும் சாலை வெட்டுப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சீரமைப்பு குறித்தும் முதலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இணை ஆணையர் (பணிகள்). பெருநகர சென்னை மாநகராட்சி அவர்கள் 29.09.2023 அன்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கேற்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் அவர்களுக்கு விவரித்தார்கள்.
சாலை வெட்டுக்களில் உள்ள ஒட்டுப்பணிகளை விரைந்து முடிக்க மண்டல வாரியாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்கள். ஒவ்வொரு மண்டலத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு Micro Plan Schedule தயாரிக்கப்பட்டு அதன்படி பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சி: பெருநகர சென்னை மாநகராட்சியில் கே.கே.நகர் அண்ணா பிரதான சாலை, நெடுஞ்செழியன் சாலை, பாடசாலை, மணலி சின்னசேக்காடு, மாதவரம், முகலிவாக்கம், வளசரவாக்கம், இராமாபுரம், மணப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் பணிகள் முடிக்கப்பட்ட சாலைகளில் நிரந்தர சாலை வெட்டு சீரமைப்பு பணிகள், தற்காலிக சாலை வெட்டு சீரமைப்புப்பணிகளையும் சீராக செல்ல 15.10.2023-க்குள் அறிவுறுத்தினார்கள்.

தலைமைச் செயலாளர் அவர்கள் நெடுஞ்சாலைத்துறை, அண்ணா சாலை, ஜி.எஸ்.டி சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, 100 அடி சாலை, மேடவாக்கம் பிரதான சாலை, வேளச்சேரி- தாம்பரம் சாலை, மர்மலாங் பாலம் இரும்புலியர் சாலை, வளசரவாக்கம் வள்ளுவர் நகர் சாலை, எருக்கஞ்சேரி சாலை, மேடவாக்கம் மாம்பாக்கம் சாலை, வானகரம் அம்பத்தூர் புழல் சாலை ஆகிய சாலைகளில் மேற்கொண்டு வரும் சாலை வெட்டு மற்றும் சீரமைப்புப்பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். 15.10.2023-க்குள் விரைந்து
தலைமைச் செயலாளர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்கள்.
கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி அவர்கள் இதுவரை 82 சதவிகித மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதென்றும் மீதமுள்ள பணிகள் 15.10.2023-க்குள் முடிக்கப்படும் என தெரிவித்தார்கள். மண்டலம்-4ல் தென்றல் சாலை, மணலி சாலை, எம்.கே.பி. நகர் முதல் பிரதான சாலை, வடக்கு அவென்யூ சாலை ஆகிய சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினை 15.10.2023க்குள் முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். மண்டலம்-5ல் இராஜாஜி சாலை, பிரகாசம் சாலை, போலீஸ் கமிஷனர் சாலை ஆகிய சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீதமுள்ள மழைநீர் வடிகால் பணிகளை 15.10.2023க்குள் முடிக்கவும் அறிவுறுத்தினார்கள். மண்டலம்-6ல் பெரம்பூர் பேரக்ஸ் சாலை, மேடவாக்கம் டேங்க் சாலை, ஸ்டீபன்சன் சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணி, Sump Work and Pumping arrangements, Sluice Gate அமைக்கும் பணிகளை 15.10.2023க்குள் முடிக்க அறிவுறுத்தினார்கள். மண்டலம்-7ல், குறிஞ்சி தென்றல் திரு.வி.க தெரு, மண்டலம்-8ல் பெரியார் பாதை, மண்டலம்-9ல் R.A.புரம் ஒன்றாவது சாலை, மண்டலம்-10ல் அசோக்நகர் 11வது அவென்யூ சாலை, 4வது அவென்யூ சாலை, 54வது தெரு ஆகிய சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினை 15.10.2023க்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். மண்டலம்-11, மண்டலம்-12 மற்றும் மண்டலம்-13ல் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் 15.10.2023க்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் Silt Catch Pit அமைக்கும் பணியினையும் 15.10.2023க்குள் முடித்து மழைநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
நெடுஞ்சாலைகள் துறை, ஈ.வெ.ரா பெரியார் சாலை, அண்ணா சாலை. இரும்புலியூர் சாலை ஆகிய சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் Silt Catch Pit அமைக்கும் பணிகளை 15.10.2023க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
நீர்வள ஆதார துறை முக்கிய நடவடிக்கை: நீர்வள ஆதார துறை, பருவ மழை முன்னெச்சரிக்கை ஆயத்தப்பணிகளில் அனை ஏரியிலிருந்து மழைநீர் வெளியேற பல்லாவரம் சுற்றுவட்டாரச்சாலை, DLF பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி, தணிகாச்சலம் நீர்வழி கால்வாய், மாதவரம் டேங்க் புணரமைக்கும் பணிகளையும் 15.10.2023க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். மேலும், செம்பரம்பாக்கம் அனகாபுத்தூர் பகுதி, போருர் ஏரி, போருர் push through culvert, போருர் உபரி நீர் கால்வாய், கொசஸ்தலை ஆற்றின் கரை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். தணிகாச்சலம் கால்வாய், மாதவரம் ரெட்டேரி, கொலப்பாக்கம் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளையும், வெள்ளத் தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். தாம்பரம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 13 மழைநீர் வடிகால் பணிகளில் 4 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.















Click it and Unblock the Notifications