சென்னையில் வியப்பு.. ஹோட்டல், லாட்ஜ்களில் திடீர்னு நிரம்பிய கூட்டம்.. எகிறிய வாடகை.. ரூ.10 ஆயிரம்?
சென்னை: சென்னை மற்றும் சென்னையின் நகர்ப்புற பகுதிகளில் நிலைமை இன்னும் சீராகாத நிலையில், பலரும் ஓட்டல்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
சென்னையை உலுக்கிவிட்டுப்போன புயலின் பாதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை.. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவருமே மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. மழைநீரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இதைத்தவிர, வெளி மாவட்டத்தில் இருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்புவாசிகள்: சென்னையின் புறநகரில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், அந்த பகுதியிலுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்... தரைத்தளப்பகுதி முழுவதுமே மூழ்கிவிட்டது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது... கார், பைக், பிரிட்ஜ், வாஷிங் மிஷின், சோபா, கட்டில், மற்றும் மின்சார பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் அனைத்துமே நீரில் மூழ்கி சேதமடைந்தன.
குடிநீர்: மழை பெய்து ஓய்ந்ததும், அன்றைய தினமே நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், சிலர் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்தனர்.. ஆனாலும், உணவு, குடிநீர், கரண்ட் என அத்தியாவசிய தேவை கிடைக்காமல், 2 நாட்களுக்கு மேல் மொட்டை மாடிகளிலும், அப்பார்ட்மென்ட் மாடிகளிலும் தங்க முடியவில்லை. எனவே, சிலர் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று தங்கியிருக்கிறார்கள்.
உறவினர்கள் இல்லாதவர்கள், வேறுவழியின்றி, ஹோட்டல், லாட்ஜ்களில் ரூம் எடுத்து எடுத்து தங்குகிறார்கள். இதனால், சின்ன சின்ன ஓட்டல்கள் முதல் லாட்ஜ்கள் வரை கூட்டம் நிரம்பி வருகிறது. சென்னையின் ஓட்டல், லாட்ஜ்களில் ரூம் கிடைத்தாலும், சாப்பாடு உள்ளிட்ட மற்ற தேவைகளுக்கும் பணம் விரயமாகி கொண்டிருக்கிறது.
லாட்ஜ்: அதேபோல, ஐ.டி. கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களும், லாட்ஜ்களில் ஆன்லைனிலேயே ரூம் புக் செய்துவிடுகிறார்கள். இதனால், ஓட்டல்கள், லாட்ஜ்களில் ரூம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது..
பல ஓட்டல்களில் ரூம் கிடைக்காத நிலையில், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுவிடுகிறார்கள்.. இதுதான் சாக்கு என்று, லாட்ஜ், ஓட்டல் ஓனர்கள், ரூம் வாடகையை உயர்த்திவிட்டார்களாம்.. ஒருநாளைக்கு தங்குவதற்கான கட்டணம் ரூ.10 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications