சென்னையில் வெள்ளம்.. 4 மாவட்டங்களில் "கரண்ட் பில்" செலுத்த கால அவகாசம்.. தங்கம் தென்னரசு
சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னை நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தமிழக அரசும் பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் கொடுத்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு மேற்கண்ட 4 மாவட்ட மக்களும் எந்தவித அபராதமும் இன்றி டிசம்பர் 18ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிக்ஜாம் புயலால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட மக்கள் டிசம்பர் 18-ஆம் தேதி வரை மின்கட்டணத்தை அபராதம் இன்றி செலுத்தி கொள்ளலாம்.

இதேபோல் மின் நுகர்வோர் டிசம்பர் 4 ம் தேதி முதல் 6ம் தேதி வரை அபராதம் செலுத்தியிருந்தால், அது அடுத்த மின்கட்டணத்தின் போது சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் மின் நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications