444 கிமீ.. களமிறக்கப்படும் ரூ.2.5 லட்சம்.. ஸ்டாலின் போட்ட கையெழுத்து.. சென்னையின் அடித்தளமே மாறுது!
சென்னை: சென்னை பெருநகரப் பகுதிக்கான ரூ. 2.5 லட்சம் கோடி மதிப்பிலான விரிவான போக்குவரத்துத் திட்டத்திற்கு (CMP) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் திட்டம், சென்னையின் போக்குவரத்து திட்டங்களை விரிவுபடுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் 25 ஆண்டு கால செயல் திட்டத்தை வகுத்துள்ளது. அதாவது சென்னையில் பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ திட்டத்தை விரிவு செய்வதற்கான மாஸ்டர் பிளான் வகுக்கப்பட்டது.
நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் (CUMTA) இரண்டாவது கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்த CMP திட்டத்தின்படி, சென்னை மெட்ரோவின் தற்போதைய 172 கி.மீ. தூர மெட்ரோ ரூட், 2048-ம் ஆண்டுக்குள் 444 கி.மீ. ஆக விரிவுபடுத்தப்படும்.

444 கிமீ தூரத்திற்கு விரிவாக்கப்படும் மெட்ரோ
இதில் தற்போது நடைபெற்று வரும் 54 கி.மீ. முதல் கட்டப் பணிகளும், 118 கி.மீ. இரண்டாம் கட்டப் பணிகளும் அடங்கும். கூடுதலாக, 152 கி.மீ. நீளத்திற்கு மெட்ரோ லைட் ரயில் வலைப்பின்னல் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் சேவை மேம்பாட்டிற்காக, 182 கி.மீ. தூரத்திற்கு புதிய வழித்தடங்களும், தற்போதுள்ள 126 கி.மீ. தூர வழித்தடங்களை நவீனப்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும். இதுதவிர, 438 கி.மீ. தூரத்திற்கு பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு (BRTS) வலைப்பின்னலும் உருவாக்கப்படும். இந்த BRTS திட்டத்தில் ஆலந்தூர்/தாம்பரம் முதல் பரந்தூர் வரையிலும், காஞ்சிபுரம் முதல் செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி/கடலூர் வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி, ஸ்ரீ சிட்டி மற்றும் நெல்லூர் வரையிலும் முக்கிய இணைப்புகள் உருவாக்கப்படும்.
3 வகையான திட்டம்
CMP திட்டம், பணிகளை குறுகியகால, மத்தியகால, மற்றும் நீண்டகாலப் பிரிவுகளாகப் பிரித்துள்ளது. 2030-க்குள் நிறைவு செய்யப்பட வேண்டிய பணிகளுக்காக ரூ. 75,976 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான நிதி பொதுப் போக்குவரத்து விரிவாக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து, 2040-ம் ஆண்டு வரையிலான திட்டங்களுக்கு ரூ. 95,777 கோடியும், இறுதி கட்டமான 2048-ம் ஆண்டு வரையிலான முதலீடுகளுக்கு ரூ. 40,768 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) 2018-ல் தயாரித்த CMP திட்டம், 1,189 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியது. ஆனால், 2022-ல் சென்னை பெருநகரப் பகுதி 5,904 சதுர கி.மீ. ஆக விரிவுபடுத்தப்பட்டதால், இந்தத் திட்டம் புதுப்பிக்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தை ஒருங்கிணைத்து கண்காணிக்க CUMTA அமைப்புக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
இந்தத் திட்டம், நீடித்த போக்குவரத்து கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இது வாகனங்களை விட மனிதர்களின் இயக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல் மற்றும் பல போக்குவரத்து ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது. மேலும், தனிப்பட்ட வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும், நடப்பதையும், மிதிவண்டிப் பயணத்தையும் ஊக்குவிப்பதன் மூலமும், நகர வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலமும், காற்று மாசுபாட்டைக் குறைத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இத்திட்டம் முயல்கிறது.
அதாவது சென்னையில் பொதுப்போக்குவரத்து வரும் காலங்களில் அதிகரிக்கும். அதற்கு பதிலாக கார், பைக் பயணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது போக நடைப்பயணம், மிதிவண்டி பயணத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications