சிதம்பரம் கோயில் விவகாரம்.. பாஜக எஸ்.ஜி.சூர்யாவுக்கு எதிராக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட் தடை
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டதாக தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மீது பதியபட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனகசபையிலிருந்து வழிபட அனுமதிக்கும் விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அங்கு பூஜை நடத்திய தீட்சிதர் ஒருவரைத் தாக்கி பூணூலை அறுத்ததாக 'தி கம்யூன்' என்ற இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இரு பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்படும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும் செய்தி வெளியிட்டுள்ளதா கூறி சிதம்பரம் நகர கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஜூன் 28-ம் தேதி அளித்த புகாரில் செய்தி நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பாஜக மாநில செயலாளருமான எஸ்.ஜி.சூர்யா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், கருத்து சுதந்திரத்தையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும் முடக்கும் நோக்கிலும், வழக்கு பதியபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாராணைக்கு வந்தபோது, சூர்யா தரப்பில், பொதுமக்கள் யாரும் புகார் அளிக்காத நிலையில், ஆளும் கட்சி நிர்வாகத்தில் அக்கறை கொண்ட கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் தன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வழக்கு தொடர்பாக 6 வாரங்களில் சிதம்பரம் காவல் நிலையத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டதுடன், அதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications