சவுக்கு சங்கருக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ 10 ஆயிரம் இழப்பீட்டை அரசு வழங்குமா? நீதிபதி கேள்வி
சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது சட்டவிரோதம் என முடிவு வந்தால், குண்டர் சட்டத்தில் அவரை சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்த பிறகு, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ 10 ஆயிரம் இழப்பீட்டை அரசு வழங்குமா என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாய் கமலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி சுவாமிநாதன், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனால், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, சவுக்கு சங்கர் தாய் மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து, வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக நீதிபதி ஜெயச்சந்திரனை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கடந்த 4 ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பதில்மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டதால், நீதிபதி பாலாஜி உத்தரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக யூகிக்க வேண்டியுள்ளது என்பதால், வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டதில் அது சட்டப்படி பிறப்பிக்கப்படவில்லை என நீதிபதி சுவாமிநாதன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதால், வழக்கை முடிவு செய்ய பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்ததாக நீதிபதி குறிப்பிட்டார்.
அரசு பதில் மனு தாக்கல் செய்து ஒத்துழைப்பு வழங்கவில்லை. இன்று பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தருகிறேன். அதன்பின் விசாரிக்கலாம். தனிநபர்களின் சுதந்திரம் முக்கியமானது. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்ட விரோதம் என்று முடிவு செய்தால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்த பின், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அரசு ரூ 10 ஆயிரம் இழப்பீடு வழங்குமா என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சவுக்கு சங்கர் தாய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்புவது அவசியமில்லை. அது நீதித்துறை நேரத்தை வீணடிக்கும் செயல் என்றார்.
இருவர் தன்னை சந்தித்ததால் வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டு உத்தரவை ரத்து செய்ததாக நீதிபதி சுவாமிநாதன் கூறுவதும் தவறு. என இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் வாதிட்டார்.
இதையடுத்து பிற்பகல் 2.15 மணிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications