சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி போராட்டம்.. வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கு ஹைகோர்ட்டில் ரத்து

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கடந்த 2018-ம் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது.

Chennai HC rejects case against Velmurugan in Cauvery Management board issue

இந்த போராட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 18 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் ஆயிரம் விளக்கு காவல் நிலையம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையானது சென்னை எம்.பி.மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தங்கள் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி வேல்முருகன் உள்ளிட்ட 18 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

கணவன் + 2 கள்ளக்காதலன்கள்.. மகாலட்சுமி செய்த காரியத்தை பாருங்க.. பரிதாப வேல்முருகன்..!கணவன் + 2 கள்ளக்காதலன்கள்.. மகாலட்சுமி செய்த காரியத்தை பாருங்க.. பரிதாப வேல்முருகன்..!

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வேல்முருகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காந்திகுமார் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தான் போராட்டம் நடைபெற்றது. எனவே குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதங்களை வைத்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கில் எந்த முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

English summary
Case against Tamilaga Vazhvurimai Party president Velmurugan quashed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X