அன்னபூரணிக்கு வந்துச்சு பாருங்க கோபம்.. "அதான் சென்னையவே சிதைச்சிட்டு"..மீம்ஸ்களால் சூடாகும் இணையம்
அன்னபூரணி சாமியாரின் மீம்ஸ்கள் வைரலாகி கொண்டிருக்கின்றன
சென்னை: சென்னையில் மழை கொட்டி வரும் நிலையில், "அன்னபூரணி அம்மாவ பகைச்சானுவ.. சென்னையவே சிதைச்சிட்டு".. என்று நெட்டிசன்கள் கலாய்த்து மீம்களை தெறிக்க விட்டுள்ளனர்.
அன்னபூரணி அம்மா, ஆதிபராசத்தி அம்மா அவதரித்து விட்டார் என்று கடந்த வாரம் சோஷியல் மீடியாவே திணறி போகும் அளவுக்கு வைரலானார் பெண் சாமியார் அன்னபூரணி என்பவர்.
பெண் சாமியார் என்றால், காவி உடையோ, ஜடாமுடியுடனோ காணப்படவில்லை.. இவர் காரில் வந்து இறங்குகிறார்.. ஸ்டார் ஹோட்டலில்தான் பக்தர்களை சந்திக்கிறார்.. பளபளவென பட்டுப்புடவை, நகை, லிப்ஸ்டிக் என சகலமும் கொண்டு தன்னை அலங்கரித்து கொண்டுள்ளார்.

சந்திப்பு
கழுத்தில் மாலைகள் தொங்க, கையை காட்டி பக்தர்களை ஆசீர்வாதம் செய்கிறார்.. இந்நிலையில், இவரை ஒரு தனியார் சேனல் பேட்டி எடுத்தது.. அந்த பேட்டியில் அன்னபூரணியின் பேச்சுக்கள் அத்தனையும் அவரை மேலும் ஓவர்நைட்டில் பிரபலமாக்கியது. அதில், "நான் எங்கும் ஓடி ஒளியல.. என்னை பற்றி ஒரு வதந்தி பரவுகிறது.. அதனால் நேரடியாக வந்திருக்கிறேன்... நான் என்னை சாமி என்றோ ஆதிபராசக்தி என்றோ சொல்லவில்லை.. யாரிடமும் என்னை நம்புங்கள், என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை..

பாதிப்பு
எனக்குள் இருக்கும் சக்தியை புரிந்து கொள்ளாமல் என்னை அவமானப்படுத்த முயற்சிக்கிறீர்கள்... என்னை அவமானப்படுத்துவதாலோ, என்னை புகழ்வதாலோ, எனக்குள் எந்த பாதிப்பும் ஏற்படாது. என்னைப் பொறுத்தவரையில் நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவள், கடவுள் என்பதே இல்லை, அது ஒரு சக்தியாக இருக்கிறது. அது எனக்குள் இருக்கிறது என்று உணர்கிறார்கள்" என்றார்.

மிரட்டல்
இந்த பேட்டியின்போது, "என்னை சாதாரணமா நினைச்சிட்டு இருக்கீங்க இல்லே?" என்று மிரட்டினார்.. அப்போது அன்னபூரணிக்கு மூச்சு வாங்கியது.. என்னை பற்றி உங்களுக்கு புரியவில்லை என்று கோபமாக கத்தி ஆவேசத்தின் உச்சிக்கு போனார்.. பிறகு தண்ணீர் எடுத்து குடித்து சாந்தமானார்.. மறுபடியும் பேட்டியை ஆரம்பித்தார்.. அன்னபூரணி மூச்சு வாங்கி கொண்டே மிரட்டிய வீடியோக்கள் இணையத்தில் பரபரப்புடன் ஷேர் செய்யப்பட்டது.. அன்றைய தினமே அந்த வீடியோவை வைத்து மீம்ஸ்களும் வெளியாகின..

மீம்ஸ்கள்
இப்போது சென்னையில் மழை வெளுத்து கட்டி கொண்டிருக்கிறது.. மக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்துள்ள இந்த நேரத்திலும், அன்னபூரணியின் இதே வீடியோவை வைத்து மீம்ஸ்களை தயார் செய்துவிட்டனர் நம் நெட்டிசன்கள்.. அதில் ஒரு மீமில், வடிவேலு மருத்துவமனையில் அட்மிட் ஆகி சீரியஸ் கண்டிஷனில் படுத்துள்ளார்.. இந்த போட்டோவை பதிவிட்டு, "அன்னபூரணி அம்மாவ பகைச்சானுவ.. சென்னையவே சிதைச்சிட்டு".. என்று கேப்ஷன் போட்டுள்ளனர்..

நெட்டிசன்கள்
இந்த மீம்ஸ்களை பார்த்த நெட்டிசன்களும், "நினைச்சேன்.. அன்னப்பூரணி அன்னைக்கே மிரட்டுச்சு.. என்னை யாரும் சாதாரணமா எடுத்துக்க வேணாம்னு சொல்லி மிரட்டிச்சே.. அதான் இப்படியாகிடுச்சி.. அன்னப்பூரணியை பகைச்சிக்க வேணாம்னு சொன்னா கேட்டீங்களா? இப்ப பாருங்க, சென்னையே மூழ்குற அளவுக்கு போயிடுச்சு.." என்று கலாய்த்து வருகின்றனர்..
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications