பாஜக "இப்ராஹிம்" சொல்ல சொல்ல கேட்கலையே.. இப்ப என்னாச்சுன்னு பாருங்க.. ஹைகோர்ட் போட்ட போடு..!
வேலூர் இப்ராஹிமுக்கு அபராதம் விதித்தது சென்னை ஹைகோர்ட்
சென்னை: பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிமுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் வரும் 19-ந் தேதி தேர்தல் நடக்க போகிறது.. இதற்கான பிரச்சாரங்களை ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாய் நடத்தி வருகின்றன.
அந்த வகையில் பாஜக இந்த முறை, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக தேர்தலை சந்திக்கிறது.. எனவே, அதிகப்படியான இடங்களை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.

இப்ராஹிம்
அதனால், பாஜகவை சேர்ந்த அத்தனை தலைவர்களும் தமிழகம் முழுவதும் படுபிஸியாக பிரச்சார களமிறங்கி உள்ளனர்.. அந்த வகையில், கோவை போத்தனூர் 95 வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வந்திருந்தார்.. ஆனால், அந்த சமயத்தில் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசார் அவரை அங்கிருந்து உடனே கிளம்பி செல்லும்படி சொன்னார்கள்..

கைது
அதற்கு, தான் இங்கு வந்ததே பிரச்சாரம் செய்வதற்குதான் என்றும், அதை யாரும் தடுக்கக் கூடாது என்றும் வேலூர் இப்ராஹிம் போலீசாரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.. இதனால் வேறுவழியின்றி, பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் அவரை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. இறுதியில் பிரச்சாரத்திற்கு சென்றபோதே 3-வது முறையாக அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணை
எனவே, தன்னை பிரச்சாரங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோரட்டில் வேலூர் இப்ராஹிம் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் பல விவரங்களை சுட்டிக்காட்டி பேசினார்.

தள்ளுபடி
"மனுதாரருக்கு ஏற்கனவே பலமுறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, அவருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும், பதட்டமான பகுதிகள் செல்லக்கூடாது என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆனால், வழக்கில் இது போன்ற பல தகவல்களை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறினார்... இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தவறான தகவலை அளித்து கோர்ட் நேரத்தை வீணடித்ததாக கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.. அத்துடன், மனுதராருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், அந்த தொகையை 15 நாட்களில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications