சிறுவன் கடத்தல் வழக்கு.. பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் மனு ஜூன் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை: காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் மனுவை ஜூன் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தனுஷ் (வயது 23). 'இன்ஸ்டாகிராம்' மூலம் தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ (21) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி திருமணம் செய்தார். இந்த ஜோடி பெற்றோர் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்துகொண்டனர்.

ஜெகன்மூர்த்தி மீது வழக்கு பதிவு
இதன் காரணமாக விஜயஸ்ரீயின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தனுஷின் குடும்பத்துக்கு மறைமுக மிரட்டல்கள் விடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், கடந்த 6 ஆம் தேதி நள்ளிரவில் 3 கார்களில் வந்த மர்மநபர்கள் தனுஷின் 17 வயதான சகோதரரை கடத்தி சென்றதாகவும், பின்னர் அதிகாலை நேரத்தில் காரில் இறக்கி விட்டு சென்றதாகவும் தாயார் லட்சுமி திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த விவகாரத்தில், பெண்ணின் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் தம்பியை, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன் ஜாமீன் கோரி மனு
இந்த கடத்தல் குறித்து பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்துவதற்காக திருவள்ளூரை அடுத்த ஆண்டரசன்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு திருவள்ளூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி தலைமையில் போலீஸ் படையினர் வந்தனர். அப்போது அவரது வீட்டின் முன் திரண்ட புரட்சி பாரதம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பூந்தமல்லி சாலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, ஜெகன்மூர்த்தி தலைமறைவானதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, அவரை பிடிக்க தனிப்படையை போலீசார் அமைத்துள்ளனர். இந்த நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த கடத்தல் வழக்கிற்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கோரி இருந்தார்.
சிறுவனின் தாயார் வீடியோ
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு தலைமை நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி அறிவித்தார். பின்னர் பூவை ஜெகன்மூர்த்தி தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதி வேல்முருகனை இந்த வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு முறையிட்டனர்.
இதையடுத்து இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி கூறினார். இதன்படி, பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெகன்மூர்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகர், மனுதாரருக்கும் இந்த கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பொய்யான வழக்கு. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ஜெகன்மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், இந்த சம்பவத்தில் காவல்துறை ஏடிஜிபி ஜெயராமுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவருடைய வாகனம் இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டது என்றும் வாதிட்டார். வழக்கில் ஜெகன்மூர்த்திக்கு ஆரம்ப கால தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது என்றும், எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என்றும் அப்போது இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் ஏடிஜிபி ஜெயராம் நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராம் மற்றும் பூவை ஜெகன்மூர்த்தி கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆகினர். அப்போது நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் மனுவை ஜூன் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
முன்னதாக இளைஞர் தனுஷின் தாயார் லட்சுமி பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், தனது மகன் கடத்தப்பட்ட வழக்கில் ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் அவரை ஏன் போலீசார் கைது செய்ய முயல்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications