"சல்லாபம்".. கேமரா ஆனில் இருப்பது தெரியாமல்.. வக்கீல் காட்டிய வேலை.. ஹைகோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்
வழக்கறிஞருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது சென்னை ஹைகோர்ட்
சென்னை: கேமரா ஆன் செய்து இருப்பது தெரியாமல், பெண் ஒருவருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரை நினைவிருக்கிறதா? அது தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2 வருட காலமாகவே கொரோனா பெருந்தொற்று காரணமாக லாக்டவுன் அமலில் இருந்தது.. எனவே, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது..
அந்தவகையில், பள்ளி, கல்லூரிகள் உட்பட நீதிமன்ற வழக்கு விசாரணைகள் வரை பெருமளவில் ஆன்லைன் வாயிலாகவே நடந்தது..

வீடியோ கான்பரன்ஸ்
50 சதவீதம் வழக்கறிஞர்களுடன் நீதிமன்றங்கள் அப்போது இயங்கினாலும், 50 சதவீத வழக்குகள் வீடியோ கான்பரன்ஸ் காணொளி காட்சி மூலமாகவே விசாரணை நடந்தது.. அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதம் ஒரு சம்பவம் நடந்தது. வழக்கு ஒன்றில் நீதிபதி உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தபோது, கேமரா ஆனில் இருப்பதுகூட தெரியாமல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் பெண் ஒருவருடன் சல்லாபத்தில் ஈடுபட்டுவிட்டார்.

சிபிசிஐடி
அந்த வீடியோ காட்சிகளோ சோஷியல் மீடியாவில் திடீரென வெளியாகி, நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இதையடுத்து, இந்த விவகாரத்தை சென்னை ஹைகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுடன். அந்த குறிப்பிட்ட வழக்கறிஞர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை அறிக்கையையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.. அத்துடன், சம்பந்தப்பட்ட அந்த நபருக்கு ஆயுள் கால தடை விதிக்க வேண்டும் என்றும் பார் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்தது.

கேமரா முன்பு
வழக்கு விசாரணையின்போது, ஒரு நீதிபதி உத்தரவு வழங்கிக் கொண்டிருக்கும்போது அவர் முன் ஒரு வழக்கறிஞர், இப்படி ஒழுக்க கேடாக நடந்து கொண்டது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில் இதுபோன்ற செயல் வெட்கக்கேடானது, அநாகரிகமானது, இப்படிப்பட்ட அநாகரீகம் வெட்கக்கேடு பகிரங்கமாக நிகழும்போது இந்த நீதிமன்றம் வெறும் ஊமை பார்வையாளராக இருக்க முடியாது என்று நீதிபதிகள் அப்போதே இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்திருந்தனர்..

விசாரணை
மேலும், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்ததுடன், சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.. இறுதியில் வழக்கு குறித்த அதிரடி உத்தரவையும் பிறப்பித்திருக்கிறது.

சிறை தண்டனை
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு இரண்டு வாரங்கள் சாதாரண சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.. ஏற்கனவே இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர், 34 நாட்களாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால், தண்டனையை கழித்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சிபிசிஐடி-க்கு பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications