போலி ஆவணங்கள் மூலம் தேசிய வங்கிக்கு விபூதி அடித்த நிறுவனம்! சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.6 கோடி கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக தனியார் நிறுவனத்துக்கு எதிரான புகாரில் சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவாஜி ஹைடெக் அக்ரோ ஃபுட்ஸ் என்ற நிறுவனம், பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று, ரூ.6 கோடியே 10 லட்சம் வரை மோசடி செய்ததாக, வங்கி நிர்வாகம், கடந்த 2024 ஆம் ஆண்டு சிபிஐயிடம் புகார் அளித்தது.

இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தங்கள் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிடக் கோரி வங்கி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, "சிபிஐ விசாரணை செய்வதற்கான ஒப்புதலை தமிழக அரசு திரும்பப் பெற்று விட்டதால், வழக்கு பதிவு செய்வதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதம், கடந்த ஓராண்டாக நிலுவையில் உள்ளது. இதேபோன்ற வங்கி மோசடி வழக்கில் உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது" என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ரூ.6 கோடி வங்கி மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால், புகாரை நீண்ட காலத்துக்கு நிலுவையில் வைத்திருப்பது முறையல்ல. அதனால், ஆதாரங்களை மீண்டும் சிபிஐக்கு அளிக்கும்படி வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், முதல்கட்ட விசாரணை நடத்தி, மோசடி நடந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளது எனக் கண்டறிந்தால், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications