சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடைகள்! மாநகராட்சிக்கு கோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் கட்டப்பட்டுள்ள கடைகள் உள்ளிட்ட கட்டுமானங்களை அகற்றக் கோரிய வழக்கில் சென்னை மெட்ரோ ரயில், சென்னை மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஐந்தாவது நுழைவாயில் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டி, பல கடைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் கூறி வழக்கறிஞர் அருணன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ரயில் நிலையத்தின் பெயருக்கு முன்னால் பெரிய எழுத்துக்களுடன் தனியார் நிறுவனத்தில் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான இந்த பெயரை முறையாக அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications