வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் கட்டுமான பணிக்கு இடைக்கால தடை! ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் கட்டுமான பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடர்பாக இயக்குநர் விதிகளின்படி ஒப்புதல் வழங்கியுள்ளதால் அங்குக் கட்டுமான பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளளனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

court vallalar

இந்த திட்டத்திற்கு ரூ 100 கோடி ஒதுக்கி சர்வதேச மையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன. இதனிடையே சத்தியஞான சபை பெருவெளியில் பக்தர்களின் வழிபாட்டுக்கு இடையூறாக சர்வதேச மையத்தை அமைக்கக் கூடாது.

வேறு இடத்தில் கட்டடம் கட்ட வேண்டும். சென்னை ஹைகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கட்டடம் கட்ட ஆதரவாகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் வள்ளலார் கோவிலின் பின்புறம் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவும் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளும் வகையில், விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்து வழங்கிய அனுமதிகளை எதிர்த்து புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த புதிய மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சட்டவிதிகளை பின்பற்றாமல் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளதால் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. ஆனால் அனைத்து அனுமதிகளும் விதிமுறைகள்படி பெறப்பட்டுள்ளதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அறநிலையத் துறை தரப்பிலும் வள்ளலார் கோயில் சார்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக நகரமைப்பு சட்ட விதிகளின்படி விவசாய நிலத்தை விவசாயமில்லாத பிற பயன்பாட்டுக்கு வகை மாற்றம் செய்வது தொடர்பாக நகரமைப்ப துறை உதவி இயக்குநர், வேளாண் துறை இணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்று அல்லது அறிக்கைகளை பெற்ற பிறகோ நகரமைப்பு துறை இயக்குநர் ஒப்புதல் அளிக்க முடியும்.

ஆனால் இந்த விதிகளுக்கு முரணாக வள்ளலார் கோவிலின் பின்புறம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வேளாண் துறை உதவி இயக்குநர் அறிக்கை அளிப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு, வகை மாற்றம் செய்து நகரமைப்பு இயக்குநர் உத்தரவிட்டுள்ளதால், அந்த பகுதியில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டனர்.

அதே நேரம் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடர்பாக இயக்குநர் விதிகளின்படி ஒப்புதல் வழங்கியுள்ளதால் அங்குக் கட்டுமான பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+