வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் செம்ம.. சென்னை ஐசிஎப் சனிக்கிழமை அனறு செய்த தரமான சம்பவம்
சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலை 25-வது வந்தே பாரத் ரயிலை நேற்று வெற்றிகரமாக தயாரித்து வழங்கி இருக்கிறது. நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. சென்னையில் தயாரிக்கப்படும் ரயில்கள் தான் இந்தியா முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது.
25வது வந்தே பாரத் ரயில்களை தயாரித்து நாட்டுக்கு வழங்கிய ஐ.சி.எஃப் அதிகாரிகளையும், ரயில் பெட்டி தயாரிப்பு ஊழியர்களை ரயில்வே துறை உயரதிகாரிகள் நேற்று வெகுவாக பாராட்டினார்கள்.

இந்தியாவிற்கு ரயில்களை தயாரித்து அனுப்பும் தொழிற்சாலை என்றால், அது சென்னை பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலை தான். இந்த ஐசிஎப் தொழிற்சாலை உலகப்புகழ்பெற்றவை. இந்தியாவில் இன்று ஓடும் எத்தனையோ ரயில்கள் இங்கு தான் தயாரிக்கப்பட்டவை. இங்கு 25-க்கும் மேற்பட்ட வடிவமைப்பில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டிலேயே அதிவேகத்தில் இயங்கக்கூடிய வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்கப்போவதாக அறிவித்தது. அந்த ரயிலை தயாரிக்கும் பொறுப்பு சென்னை ஐசிஎப் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது.
இதன்படி முதல் வந்தே பாரத் ரயில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 'ரயில் 18' என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2019-ல் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் வந்தே பாரத் ரயில் டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ல் தொடங்கியது.
பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் 115 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ஆர்டர் கிடைத்துள்ளது. இதுவரை 25 வந்தே பாரத்ரயில்கள் தயாரிக்கப்பட்டு, ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நேற்று தான் 25 வது வந்தே பாரத் ரயில் தயாரித்து ஒப்படைக்கப்பட்டது.
சென்னை ஐசிஎப் இல் 16 பெட்டிகள் மற்றும் 8 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை 180 கி.மீ. வேகத்தில் இயக்க சோதனை செய்யப்பட்டு, 160 கி.மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, டெல்லி-ஆக்ரா இடையே அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
சென்னையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வேயில் சென்னை-மைசூர் இடையேவும், சென்னை-கோவை இடையேவும், திருவனந்தபுரம்-காசர்கோடு இடையேவும் தலா ஒருவந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. மெட்ரோ வந்தே பாரத் ரயில், தூங்கும் வசதி வந்தே பாரத் ரயில், சரக்கு வந்தே பாரத் ரயில், புறநகர் வந்தே பாரத் ரயில் ஆகிய 4 வகைகளில் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கவும் ஐசிஎப் இல் திட்டமிடப்படுள்ளது,
2023-24-ம் உற்பத்தியாண்டில், சென்னை ஐசிஎஃப்-பில் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications