AC ரயிலில் ஹேப்பி.. ஸ்லீப்பர் வந்தே பாரத் 50 வருது.. சென்னை ஐசிஎப் தந்த சர்ப்ரைஸ்! பயணிகள் மகிழ்ச்சி
சென்னை: வந்தே பாரத் ரயில்கள், பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.. இதுவரை, 77 வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. எனினும், ரயில்களின் தேவை அதிகமாகவே உள்ளது. அதனால்தான், வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை குறைத்து, ஸ்லீப்பர் வசதியுள்ள வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க போவதாக ஐசிஎப் அறிவித்திருக்கிறது.
உலகளவில் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் மிக முக்கியமான தொழிற்சாலையாக, நம்முடைய சென்னை ஐசிஎஃப் திகழ்ந்து கொண்டிருக்கிறது.. இதுவரை 500க்கும் மேற்பட்ட டிசைன்களில் 75,000க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன.

ஸ்லீப்பர் வந்தே பாரத்
வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்புகளும் ஐசிஎப்-பில்தான் நடக்கிறது.. வந்தே பாரத் தவிர, சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதர்ன்" ரயில் பெட்டிகள், வந்தே மெட்ரோ ரயில்கள், அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள், வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் என பல்வேறு ரயில்களின் பெட்டிகளும் ஐசிஎப்பில்தான் தயாராகி கொண்டிருக்கின்றன.
எனினும், இதில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது, ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள்தான்.. சமீபத்தில்கூட, ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில், பயணிகளை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது.
ஐசிஎப் தந்த சர்ப்ரைஸ்
இந்நிலையில், படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக ஐசிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஐசிஎப் அதிகாரிகள் சொல்லும்போது, "நீண்ட தூரம் பயணம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் விரைவில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இனிமேல் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிப்பை அதிகப்படுத்த போகிறோம்.. இயற்கை வசதியுடைய வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பு படிப்படியாக குறைக்கப்பட உள்ளது. காரணம், இந்த ரயில் பெட்டிகளுக்கான தேவை தற்போது போதுமானதாக உள்ளது. ஆனால், ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் தேவைதான் அதிகமாக உள்ளது.
50 ஸ்லீப்பர் வந்தே பாரத்
இதைத்தவிர, பல்வேறு மண்டலங்களுக்கு கீழ் ஸ்லீப்பர் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திடம் பட்டியல் அளிக்கப்பட உள்ளது. இதில் 16 பெட்டிகள், 24 பெட்டிகள் என 2 வகையான ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 2 வருடங்களில் 50 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. வந்தே பாரத் வகை ரயில்களை, ரயில்வேயின், இதர தொழிற்சாலைகளிலும் தயாரிக்க கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளனர்.
வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை குறைத்து, ஸ்லீப்பர் வசதியுள்ள வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க போவதாக ஐசிஎப் தெரிவித்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications